Connect with us

LatestNews

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு..

Published

on

மதுரை தானப்ப முதலித தெருவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மதுரை டிச 22 தானப்ப முதலி தெருவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 42 இவர் தானப்ப முதலி தெருவில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சோபனா கொடுத்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
***************************
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வழிப்பறி பைக் ஆசாமி கைவரிசை
மதுரை டிச 22 மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திடீர் நகர் மேலவாசல் இப்பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 38 இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கழிப்பிடத்திற்கு சென்றபோது பைக்கில் சென்ற 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்திமுனையில் வழிமறித்து அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை பரிசு சென்றுவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் திடீர் நகர் போலீஸ் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ஆசாமியை தேடி வருகின்றனர்.
****†***********************
புதருக்குள் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
மதுரை 22 மதுரையில் புதருக்குள் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் இவருக்கு வண்டியூர் சங்கு நகரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது இவர் போலீசாரிடம் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது அந்த பகுதியில் புதருக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்துகொண்டிருந்த மதுரை ராஜாக்கூரைச் சேர்ந்த அருண் பாண்டி என்ற ஜெட்லி 25 இவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
*****************************
மதுரை அண்ணாநகரில் குடோனில்
21லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
ஊழியர் கைது
மதுரை டிச. 22 அண்ணாநகரில் செல்போன் குடோனில் வைத்திருந்த 21லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணா நகர் 80 அடி ரோட்டில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவன குடோன்உள்ளது .இங்கு எக்சேஞ்ச் செய்வதற்காக ரூபாய் இருபத்தி ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள 35 விலை உயர்ந்த செல்போன்கள் வைக்கப்பட்டிருந்தன .சம்பவத்தன்று இங்கு ஆடிட் செய்தபோது செல்போன் பெட்டிகளில்போனுக்கு பதிலாக பேட்டரி மட்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை சிசிடிவியில் பார்த்தபோது அந்த கடையில் வேலை பார்த்த வேலையால் மனோஜ் என்பவர்திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.அவரை தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார் .இதனுடைய மதிப்பு 21ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 480 ஆகும். இந்த திருட்டு தொடர்பாக அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜ்குமார் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில்எஸ்.ஐ. செந்தில்குமார் எஸ்எஸ்ஐ பன்னீர்செல்வம் கம்ப்யூட்டர் பிரிவு தலைமை காவலர் கணேச பாண்டி மற்றும் போலீசார் வெங்கட்ராமன் முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர் இவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு பல்வேறு கடைகளிலும் தனி நபர்களிடமும் விற்கப்பட்ட ரூபாய் 20 லட்சத்து 20 ஆயிரத்து 30 ரூபாய்மதிப்புள் செல்போன்களை கைப்பற்றினர் .இந்த திருட்டில் ஈடுபட்ட வேலையால் மனோஜை தேடிவந்தனர் .சில நாட்கள் தலைமறைவாக இருந்த மனோஜ் மதுரைக்கு நேற்று முன்தினம் வந்தது தெரியவந்தது . போலீசார் மனோஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
*************************
சில்லறை வணிகத்தில் அன்னிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்
நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கம் தீர்மானம்.
மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இருவத்தி ஒன்பதாவது பொதுக்குழு கூட்டம் நடந்தது .சங்க தலைவர் மாதவன் தலைமை தாங்கினார் செயலாளர் வினோத் கண்ணா பொருளாளர் வெங்கட சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர் துணைத் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நாட்டில் சில்லறை வணிகம் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது இதனால் பன்னாட்டு நிறுவனத்தினர் சில்லரை வணிகத்தில் ஆர்வம் காட்டுகின்றனர் அவர்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டால் ஏற்கனவே உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் ஏராளமானவர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் கொரோனா காலத்தில் எந்த ஒரு விநியோகஸ்தர்களும் மொத்த சில்லறை வணிகர்கள் தங்களின் தொழிலை லாபகரமாக செய்ய முடியவில்லை இதனால் ஜிஎஸ்டி குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய முடியவில்லை இதனால் அபராதம் செலுத்த நேரிட்டது எனவே 2020 21 ஆம் ஆண்டில் தாமதத்திற்காக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி அபராத தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும் சில்லரை வணிகத்தில் அன்னிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
******************************

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: