Connect with us

LatestNews

கழிவு நீரை கால்வாயில் கொட்ட எதிர்ப்பு…

Published

on

செப்டிக் டேங்க் கழிவு நீரை கால்வாயில் கொட்டும் தனியார் செப்டிக் டேங்க் லாரி மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:

மதுரை

மதுரை மாவட்டம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 1 எதிரே உள்ள வார்டு நம்பர் 14. மாப்பாளையம் சாலை ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகம் ஒட்டி உள்ள கால்வாயில்
தனியார் கழிவுநீர் இயக்கும் லாரிகள் தொடர்ச்சியாக மாறி மாறி செப்டிக் டாங்கில் லாரிகள் செப்டிக் டேங்க் கழிவுகளை வாய்க்காலில் கொட்டி சொல்கின்றனராம். இதனால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது .
இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஆணையாளர், சம்பந்தப்பட்ட தனியார் கழிவுநீர் வாகனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .
மேலும், இந்த நிகழ்வினை, புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளரின் பொதுமக்களை மிரட்டும் தோணியில் ஓட்டுனர் பேசியுள்ளாராம்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

திறக்கப்படாத சமுதாயக் கூடம்

Published

on

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய
சமுதாய கூடம் மக்கள் கொதிப்பு
மதுரை, ஜன. 24
புதூரில் தி.மு.க., சார்பில் பகுதி செயலாளர் அக்ரீ கனேசன், 46 வது வார்டு வட்ட செயலாளர் மருது ஆகியோர் ஏற்பாட்டில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. பொறுப்புக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எஸ்ஸார் கோபி, வேலுச்சாமி, குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் 2010ல் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள சமுதாயக்கூடம் 10 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராததால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிட்டது. குப்பைத் தொட்டியின் அருகே சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பெண்கள் செல்ல அச்சமாக உள்ளது. இப்பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும் போன்ற ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.

Continue Reading

LatestNews

கிராம சபைக் கூட்டம் நடத்த கோரிக்கை…

Published

on

கொரோனாவால் பல கிராமங்களில் நடைபெறாத கிராமசபைக் கூட்டங்களை வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் எல்லா கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் நடத்த வேண்டும் என கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்த மக்கள் நீதி மையத்தின் தொழிலாளர் அணி தென் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர்.

Continue Reading

LatestNews

யாகசாலை அமைக்கும் பணி

Published

on

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது சிறுவர் சிறுமியர்கள் குடங்கள் எடுத்து வருகின்றனர் சோழவந்தான் ஜன 22 சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதையொட்டி நாளை காலை 5 மணி அளவில் யாக பூஜை தொடங்குகிறது 9 மணியளவில் வைகை ஆற்றில் சிறுவர் சிறுமியர்கள் தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோவிலை வந்து அடைந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது நாளை மறுநாள் தொடர்ந்து யாக பூஜை நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூஜை தொடங்கி ஒன்பது ஐந்து மணியிலிருந்து ஒன்பது 55 மணிக்குள் ராஜகோபுரம் விமானம் மும்மூர்த்தி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதைத் தொடர்ந்து விநாயகர் முருகன் ஜெனகை மாரியம்மன் உட்பட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது விழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சுப்ரமணியன் செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ இணைச்செயலாளர் கொரியர் கணேசன் உதவி தலைவர்கள் முருகேசன் மணி என்ற முத்தையா பால்பாண்டி சின்னப்பாண்டி ஜவகர் செயல் அலுவலர்கள் இளஞ்செழியன் இளமதி ஆலயப் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் செய்து வருகின்றனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் சமையல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆலோசனை பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் பேரூராட்சி இருந்து சுகாதார ஏற்பாடு கூடுதல் திருவிளக்கு கூடுதல் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் செய்து வருகின்றனர் சோழவந்தான் அரசு பஸ் டிப்போவில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் படவிளக்கம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

வலிமைக்கு அப்டேட் வேணும்: முருகனிடம் வேண்டுதல் வைத்த தென்காசி தல ரசிகர்கள்!

இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வலிமைக்கு அப்டேட் வேணும்: முருகனிடம் வேண்டுதல் வைத்த தென்காசி தல ரசிகர்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

பாகிஸ்தான் to இந்தியா.. மேலும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை!

சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது. பாகிஸ்தான் to இந்தியா.. மேலும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை!… [...]

மேலும் ஒரு ஆசிரியைக்கு தொற்று! அச்சத்தில் ஆசிரியர்கள்!

அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆசிரியைக்கு தொற்று! அச்சத்தில் ஆசிரியர்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]

பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள்: ரிசர்வ் வங்கி!

புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள்: ரிசர்வ் வங்கி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

CCPA விடுத்த எச்சரிக்கை! மீறினால் சிறை தண்டனை!

சாப்பிட்டால் 100% அல்லது 99.9% கிருமிகளைக் கொல்லும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. CCPA விடுத்த எச்சரிக்கை! மீறினால் சிறை தண்டனை!… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: