ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி சாவு..

மதுரை தேனி மெயின் ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி:

மதுரை.டிச.18.

மதுரை தேனி மெயின் ரோட்டில் ஆட்டோகவிழ்துஅதில் பயணம் செய்த மூதாட்டி பலியானார்.
மதுரை வடபழஞ்சியை சேர்ந்தவர் சேகர் 38 இவர் அபே ஆட்டோ ஓட்டி வருகிறார் .
நேற்று மாலை தேனி மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார் அந்த ஆட்டோவில் ராமாயி 61 என்ற மூதாட்டி பயணம் செய்தார்.
ஆட்டோ முத்துத்தேவர் காலனி சந்திப்பில் திரும்பும்போது கவிழ்ந்தது.இதில் படுகாயம் அடைந்த ராமாயி யைசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே ராமாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தவிபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********************************
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி
டிராவல்ஸ் உரிமையாளருக்கு
2 ஆண்டு சிறை மதுரை ஐகோர்ட் தீர்ப்பு:

மதுரை.டிச.18.

18.வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த டிராவல்ஸ்உரிமையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் குப்புசாமி என்ற குருசேவ். இவர் விருகம்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்நிறுவனத்தின்மூலமாக சவுதி அரேபியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்து அனுப்புவதாக கூறி உள்ளார். இதனால் சிவகங்கை மாவட்டம் மனக்குடியை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது நண்பர்கள் முகமது அலி பாலசுப்பிரமணி கணேசன் முருகேசன் ஆண்டிச்சாமி ஆகியோர் தங்களது பாஸ்போர்ட்டையும்பணம் மொத்தம் மூன்றுலட்சத்தையும் கொடுத்துள்ளனர் .ஆனால் டிராவல்ஸ் உரிமையாளர் அவர் சொன்னபடி வேலையை வாங்கித் தரவில்லை பணமும் பாஸ்போர்ட்டையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவந்துள்ளார். இதை தொடர்ந்து குப்புசாமி என்ற குருசேவ் மீது மத்திய மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில்ஜெயராமன்புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த மோசடி தொடர்பான வழக்கு மதுரை ஜே.எம். ஒன்றில் நடந்தது.இந்த வழக்கில் டிராவல்ஸ் உரிமையாளர் குருசாமி என்ற குருசேவ்வை, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனையும் ரூ 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: