மகள் மாயம்…

*திருநகர் பகுதியில் பணம் திருடியதாக தாய் கூறியதை தாங்க முடியாத 16 வயது மகள் மாயம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது மாணவி இவரது தாய் வீட்டில் வைத்திருந்த ரூபாய் ஆயிரம் பணத்தை காணவில்லை எனக் கூறி 16 வயது மகளை திட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த 16 வயது மகள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் தாய் அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடி சென்றுள்ளார் ஆனால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான 16 வயது மாணவியை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: