காவல் ஆய்வாளருக்கு வைரஸ் தொற்று..

விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு வைரஸ் தொற்று…
காவலர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு…..

விருதுநகர் :

விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஒருவருக்கு, சிறிது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல்நிலையத்தில் பணியிலிருந்த அனைத்து போலீசாருக்கும் பரிசோதனைகள் செய்வதற்கு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, விருதுநகர் வந்திருந்தார். கமலஹாசன் செல்லும் இடங்களுக்கு பாதுகாப்பிற்காக, பாதிக்கப்பட்ட ஆய்வாளர் சென்றிருந்தார். எனவே கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஆய்வாளருடன் தொடர்பில் இருந்தவர்கள், மேலும் உடல்நலத்தில் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், தொற்று பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: