கோழிக்கறி மொத்த வியாபாரிகள் சங்கக் கூட் டம்

மதுரையில் பிராய்லர் கோழிக்கறி மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம்

மதுரை டிச. 17-
மதுரை மாவட்ட பிராய்லர் கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம் அரசரடியில் சங்க தலைவர் ஷாசுலி இப்ராஹிம் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோழிப்பண்ணையில் தீவனத்துடன் கோழிகள் விற்பனைக்கு ஏற்றப்படும் என்று பண்ணையாளர்களும் தனியார் கம்பெனிகளும் அறிவிப்பு விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பை தளர்வு செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் கோழிகள் விற்பனைக்கு வரும் பொழுது நான்கு மணி நேரம் தீவனக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு சங்க பொருளாளர் கனகராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜார்ஜ் ரவி நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: