விஷம் குடித்து பெண் சாவு…

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து சாவு
மதுரை.டிச.15. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில்சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மகாலட்சுமி கோவில் தெரு முதல் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி 60 .இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார் .இதனால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சரஸ்வதி உயிரிழந்தார்.இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*******************************

மதுரை அருகே உத்தங்குடியில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டபெண் விஷம் குடித்து சாவு.
மதுரை.டிச.15. மதுரை உத்தங்குடியில் வயிற்று வலியால் அவதிப்பட்டபெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை உத்தங்குடி உலகநேரி 5வது தெரு சேர்ந்தவர் இந்து மலர் 30. இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை .இதனால் மனமுடைந்த இந்து மலர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே .புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
***********************************
மதுரை தைக்கால் தெருவில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி சம்பவத்தில்
பெண் உள்பட 2 பேர் கைது
மதுரை.டிச.15. சிம்மக்கல் தைக்கால் தெருவில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவத்தில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 35 .இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் .மதுரை சிம்மக்கல்தைக்கால் முதல் தெரு செட்டியார்தோப்பில் முதல் மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது தடுமாறி உயர் அழுத்த மின் கம்பத்தில் சாய்ந்து விட்டார் .இந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இவரது உடல் மின்கம்பத்தில் அந்தரமாக தொங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் வந்து அவர் உடலை மீட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக இறந்த கொத்தனார் செல்வராஜின் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட உரிமையாளர் செல்லூரைச் சேர்ந்த முத்துலட்சுமி 45 மற்றும் காண்ட்ராக்டர் தைக்கால்தெருவைச் சேர்ந்த வீரபத்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
************************************
மதுரை கூடல்புதூரில்
27 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது பைக்,பணம் பறிமுதல்.
மதுரை.டிச.15. மதுரை கூடல்புதூரில்27 கிலோ கஞ்சாவுடன் 2 பேரை கைது செய்த போலீசார் பணம் மற்றும் பைக்கைஐயும்பறிமுதல் செய்தனர்.
மதுரை கூடல்புதூர் பிஎஸ்என்எல் ரவுண்டானா அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கூடல்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .கூடல்புதூர்இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்து அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை கைதுசெய்தனர் .மதுரை யாகப்பா நகர் தாசில்தார் நகரைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்ற லவ் பெயிலியர் மற்றும் அய்யர்பங்களா இபி காலனியைச் சேர்ந்த வின்சென்ட் செல்வராஜ் என்ற தம்பு 23 என்பவரையும் . செய்து அவர்களிடம் இருந்து 27 கிலோ கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூபாய் ஆயிரத்தையும் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: