மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

கட்டிட வேலையின் போது மின்சாரம்
தாக்கி கொத்தனார் பரிதாப பலி ..

மதுரை :

மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சேகர் இவரது மகன் செல்வராஜ் (35 ) . இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு சாரம் கட்டி புதிய கட்டிடம் ஒன்றில் கட்டிடப் பணி மேற்கொண்டு வருகிறார். இந்த கட்டுமானத்தின் போது அருகே அதிக அளவு மின்சார வயர்கள் செல்கிறது. அதை கவனிக்காத இவர் எதிர்பாராதவிதமாக உயர் மின்சார வயர் அவர் மீது படவே படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த விளக்குத்தூண் காவல்துறையினர் மேலே தொங்கிக் கொண்டு இருந்த நேதாஜி ஹரி ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழே இறக்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் கட்டிட பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த கட்டிட தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரவேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: