அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்”

அமலாக்கத்துறையை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்:

மதுரை

ஆர்.எஸ்.எஸ்.
கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறையை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃபரண்ட் சாரபில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃபரண்ட் இந்தியா இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட ஒரு சமூக ஜனநாயகம் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ்-ன் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் நிர்வாகிகள் வீடு மற்றும் 8 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் எந்த முன்னறிவிப்பும் அல்லது தகுந்த காரணமின்றி சோதனை நடத்தினர்.
சுதந்திர இந்தியாவில் நாடு முழுவதும் ஒரு சமூக ஜனநாயக அமைப்பின் மீது குறிவைத்து இதுவே முதல் முறையாகும்
அமலாக்கத் துறையின் இந்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அடக்கு முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை தெற்குவாசல் பகுதியில் அதன் மாவட்ட தலைவர் முஹம்மது அபுதாஹிர் அவர் தனமனி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைத் தலைவர் ஷாலித் முஹம்மது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .
இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆண்கள் மற்றும் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: