டெங்கு ஒழிப்பு பணி..

வாடிப்பட்டி பேரூராட்சியில்

டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்.

வாடிப்பட்டி டிச

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 1 முதல் 18 வார்டுகளில் தற்போது பருவமழை பெய்து வருவதால் டெங்கு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபடும் டெங்குப் பணியாளர்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீடுகள்தோறும் மழைநீர் தேங்கியுள்ள ஆட்டுஉரல், தேங்காய் சிரட்டை, பூந்தொட்டிகள், பயனற்ற பொருள்களின் மழைநீர் தேங்கியிருப்பதை வடித்து அப்புறபடுத்தியும், திறந்து வைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளில்டெங்கு கொசு புழுக்கள் உருவாகுவதை தடுக்கும் விதமாக குடிநீர் தொட்டி மீது துணிகள் சுற்றி பாதுகாப்பாகவை க்க அறிவுருத்தியும், ஏடிஸ்கொசுஉருவாகும் சூழல் பற்றியும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டி, குளிர்பதன பெட்டிகளில் பின்புறம் வெளியேறும் கழிவு நீரில் கொசுக்கள் உருவாகாத வண்ணம் பாதுகாப்பாக வைக்க அறிவுறைகள் கூறியும் காலை ,மாலை வேலைகளில் கொசஒழிப்பு புகை மருந்து அடித்தும்

வருகின்றனர். இந்த பணியினை செயல் அலுவலர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் வந்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: