LatestNews
ரஜினி கட்சியால் திமுகவுக்கு நெருக்கடி…
ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தான் ஆபத்து என மதுரையில் ஹெச்.ராஜா பேட்டி
மதுரையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தமிழகத்தில் குழப்பம் ஏற்ப்படுத்த நினைக்கிறது, திமுக வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும், திமுக, காங்கிரஸ், விசிக ஆகிய தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும், வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒப்பந்த பண்ணை முறை நடைமுறையில் உள்ளது, வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரிந்தும் பேசுபவர்கள் அயோக்கியர்கள், திமுக விவசாயிகள் கொலை செய்துள்ளது, ஜனவரி 31 வரை மட்டுமே ஆ.ராசாவால் பேச முடியும், 2 ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளதை ஆ.ராசா ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும், திமுக கொள்ளை, கொலைகார கூட்டம், ஆதானி நிறுவனம் மிக தெளிவாக அறிக்கை கொடுத்து விட்டது, 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை காப்பற்ற கொண்டு வரப்பட்ட சட்டம், திமுகவுக்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள், 1996 ல் ரஜினிகாந்த் திமுகவுக்கு குரல் கொடுத்தவர், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கூறினார், ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தான் ஆபத்து, ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டே கட்சி தொடங்குவது குறித்து முடிவு அறிவித்து இருந்தார், ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்க கூடியவர், ரஜினிகாந்த்தை குறைத்து மதிப்பிட கூடாது, அமித் ஷா வருகையால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை" என கூறினார்
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?