தந்தை தற்கொலை முயற்சி…

மதுரை செல்லூரில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி இரண்டு வயது மகள் பரிதாப சாவு

மதுரை.டிச.8.மதுரை செல்லூரில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை. இரண்டு வயது மகள் பரிதாப சாவு

மதுரை செல்லூர் அகிம்சா புரம் எட்டாவது தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மனைவி அபிநயா 28. இவர்களுக்குஇரண்டுவயதில் ரித்திகா என்ற ஒரு மகளும் மூன்றுவயதில்சிவனேஷ்என்றமகனும் உள்ளனர். ஜெயச்சந்திரன் சென்ட்ரல் மார்க்கெட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார் .இவர் பல்வேறு இடங்களில் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிய வருகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. வழக்கம்போல நேற்றும் சண்டை நடந்தது .இதனால் மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெயச்சந்திரன் மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி மயங்கி கிடந்தார். மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் அவர்கள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே இரண்டு வயது மகள் ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.தந்தை ஜெயச்சந்திரனும் மகன்சிவநேசன் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நீதிமன்றம் அருகே சகோதரர்களுக்குள் அடிதடி 2 பேர் கைது
மதுரை.டிச.7மதுரை நீதிமன்றம் அருகே சகோதரர்களுக்கு இடையே நடநத மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை பாலமேடு அருகே முடுவார்பட்டியை சேர்ந்தவர் கருப்பன். இவரது மகன்கள் சுரேஜ்ராஜ் 33 கதிரேசன் 36 சதீஷ்குமார் 31 ஆவார்கள் .இவர்கள் நேற்று மதுரைக்கு வந்தனர் .மதுரை மாவட்ட நீதிமன்றம் நுழைவாயில் அருகே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் சுரேஷ்ராஜனை கதிரேசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசன் மற்றும் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

மதுரை சிம்மக்கல்லில் குடிக்க பணம் தராததால் உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை

மதுரை.டிச.7.மதுரை சிம்மக்கல்லில் குடிக்க பணம் தராததால் உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை.

மதுரை சிம்மக்கல் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் 42.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் மனைவி தனலட்சுமி டம் குடிப்பதற்காக பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்து விட்டதார்.இதன்ல் மனமுடைந்து வீட்டின் மாடியில் இருந்து தாவிக்குதித்து உயர் மின்னழுத்த கம்பியை பிடித்தார். அதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பட்டாபிராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.ஆந்த சம்பவம் தொடர்பாக திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பேனா பென்சில் வாங்கித்தர தந்தை மறுத்ததால் அக்கா-தங்கை வைகை ஆற்றில் மூழ்கி சாவு மதுரையில் நடந்த சோகம்
மதுரை.டிச.7. தந்தை பேனா பென்சில் வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்த அக்கா தங்கையான சிறுமிகள் வைகை ஆற்றில் மூழ்கி பரிதாப சாவு.
மதுரை ஆரப்பாளையம் மறவர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் .இவரது இரண்டு மகள்களான சுதி 12 வயது சுஜி பதினொரு வயது இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்ற வர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் தேடி வந்த நிலையில் நேற்று மாலை இருவரின்உடல்களும் வைகை ஆற்றில் இழந்த நிலையில் மீட்கப்பட்டது .இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அக்காள் தங்கைகளான சுதி 12 சுஜி 11 இருவரும் தன் தந்தையிடம் பேனாவும் பென்சிலும் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிறகு வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் வைகை ஆற்றில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கூடல் புதூரில் வீட்டு வாசலில் நின்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை.
மதுரை.டிச.7.மதுரை கூடல்புதூர் வீட்டு வாசலில் நின்றிருந்த மூதாட்டியிடம் 6 பவுன் செயினை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தபால் தந்தி நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் சாரதாமணி 66. இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் சாரதாமணி அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக சாரதாமணி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் பைக்குடன் லேப்டாப் திருட்டு
மதுரை.டிச.7.மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் லேப்டாப் பை திருடிச்சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கடச்சநேந்தல் வாட்டர் டேங்க் முதல் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி 25 இவருக்கு சொந்தமான பைக்கை ரேஸ் கோர்ஸ் சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். பைக்கில் லேப்டாப் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை வைத்து இருந்தார்.. இதை கவனித்த மர்ம ஆசாமி பைக்குடன் அனைத்து பொருட்களையும் திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு தொடர்பாக சுந்தரபாண்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: