வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..

திருப்பரங்குன்றத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டவாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை டிச.6.திருப்பரங்குன்றத்தில் மனநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம் சந்திர பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விஜயகுமார் 22 மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த தற்கொலை குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது
மதுரை டிச.6 மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிம்மக்கல் தைக்கால் முதல் தெருவை சேர்ந்தவர் பாண்டி குமார் 40 .இவர் ரேஸ்கோர்ஸ் சாலையில் சென்ற போது அவரை வழிமறித்த பூபதி ராகவேந்திரா 18 என்பவர் கத்தி முனையில் ரூபாய் முன்னுரை பறித்துச் சென்று விட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதி ராகவேந்திரா வை கைது செய்தனர்.

மதுரை செல்லூர் லாட்ஜ்மொட்டை மாடியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
மதுரை.டிச6. செல்லூர் லாட்ஜ் ஒன்றில் மொட்டை மாடியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் லாட்ஜ் ஒன்றில் மொட்டை மாடியில் பணம் வைத்து சூதாடுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர் .அப்போது பணம் வைத்து சூதாடிய கே.கே. நகரைச் சேர்ந்த வைத்தியலிங்கம் 53 உள்பட 9 பேரை கைது செய்து சீட்டுக் கட்டுகளையும் விளையாடிய பணம் ரூபாய் 9 ஆயிரத்து 170 ஐயும்பறிமுதல் செய்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்எஸ்கே தெருவில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது
மதுரை.டிச6. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்எஸ்கே 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி 39. இவரது வீட்டில் மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து வீட்டிலிருந்த 17 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை திருடி சென்று விட்டனர் .இந்த திருட்டு தொடர்பாக மீனாட்சி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவனாண்டி 24 என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

மதுரை திருப்பாலையில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
மதுரை.டிச.6. மதுரை திருப்பாலை யில் ஜெராக்ஸ் கடையை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தத்தநேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் 24. இவர் திருப்பாலை உச்சபரம்பு மெயின் ரோட்டில் காயத்ரி நகர் 3வது தெருவில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவர் வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை கடைக்கு வந்த போது கடையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜெராக்ஸ் மிஷின் கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் சாமான்கள் திருடப்பட்டிருந்தது. இந்த திருட்டு தொடர்பாக அசோக்குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: