Connect with us

LatestNews

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்.. வாலிபர் கை து…

Published

on

மதுரையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது
மதுரை டிச.5. சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மதுரை தத்தநேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி .அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சிவா 26. இவர் சிறுமியுடன் பழகியதை தெரிந்து அவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் சிவா 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சமயநல்லூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து பின்னர் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது .இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சிவாவை கைது செய்தனர்.

செல்போன் லேப்டாப் வாங்கி தர மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை டிச 5.செல்போன் லேப்டாப் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை கரிமேடு நடராஜ் நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி 21. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது கஞ்சா பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் தனது சகோதரியிடம் செல்போன் லேப்டாப் வாங்கி தரும்படி கேட்டுள்ளார் .அதற்கு அவர் மறுக்கவே மனமுடைந்த சுந்தரபாண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்ப்பால் கொடுத்த போது திடீரென்று பாதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை பரிதாப சாவு போலீஸ் விசாரணை.
மதுரை டிச.5.மதுரையில் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது உடல் நிலை பாதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மதுரை ஐயர் பங்களா ஸ்ரீ நகரை சேர்ந்தவர் பாபு .இவரது மகள் ஷிவானி பிறந்து ஆறு மாதம் ஆன சிவானிக்கு அவரது தாயார் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 6 மாத குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிக்கு அடிமையானவர் வயிற்று வலியால் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை டிச.5.குடிக்கு அடிமையானவர் வயிற்று வலியால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் தர்மர் 50. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது கஞ்சா பழக்கம் இருந்தது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாகசெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் விஷம்தின்று தற்கொலை
மதுரை.டிச.5. குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் விஷம்தின்றுதற்கொலை செய்து கொண்டார்.
மதுரை தத்தனேரி கீழ வைத்தியநாத புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 62. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது .குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி கண்டித்தார் .இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்துசெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் குடி பழக்கத்தை அம்மா கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை.டிச.5. குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை எஸ். ஆலங்குளம் பாலமுருகன் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பாண்டி மணி 22 .இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வந்த நிலையில் அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாண்டி மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் கிடைத்த வேலை பிடிக்காததால் பீல்டு ஆபீசர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை டிச.5. கிடைத்த வேலை பிடிக்காமல் மனமுடைந்த பீல்டு ஆபீசர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி ஊரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராம்குமார் 20. இவர் மதுரையில் பீல்டு ஆபீஸராக வேலை பார்த்து வந்தார். உத்தங்குடியில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தார் .இந்த வேலை அவருக்குப் பிடிக்காமல் வேலையை விட்டு ஊருக்கு சென்றுவிட்டார் .இதை அவர் தந்தைகண்டித்தார். இதனால் மனமுடைந்த ராம்குமார் மன அழுத்தம் காரணமாக அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்துகே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ரிங் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி.
மதுரை.டிச.5. மதுரை ரிங் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார்.
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் குணசேகரன் 38 .இவர் அருப்புக்கோட்டை ரிங் ரோடு மண்டேலா நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குணசேகரனுக்கு பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: