மழை வீடுகள் இடிந்தன..

திருமங்கலத்தில் கனமழை காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கனமழை காரணமாக 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன.

திருமங்கலம் அருகே பொன்னம் பட்டியைச் சேர்ந்தவர் பரமன் நேற்று இரவு முதல் நீடித்த மழையின் காரணமாக இவரது வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேபோல ஏ.வலைய பட்டியைச் சேர்ந்த அங்கத்தேவர் என்பவரது வீடும் மழையால் இடிந்து விழுந்தது.
திருமங்கலம் வட்டாட்சியர் முத்துப்பாண்டியன் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் சென்று சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: