வழிப்பறி மூவர் கைது..

சமயநல்லூ
ரில்
விவசாயிடம் வழிப்பறிசெய்த
3 வாலிபர்கள் கைது:

வாடிப்பட்டி டிச 3.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு
மெ
ட்டூரை சேர்
ந்தவர் சுந்தரமகாலிங்கம்
(வயது35) விவசாயி. இவர் மதுரை மாவட்டம் சமயநல்லூர்
அருகே திருவாலவாய
நல்லூ
ரில் திருமணம் செய்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு மாமனாரின்
மோட்டார் சைக்கிளில் சமயநல்லூ
ருக்கு வந்து கார்த்திகை தீபத்திற்கு
பொருள்கள் வாங்கிக்கொண்டு வந்தபோது சமயநல்லூர் ரயில்வேமேம் பாலத்தின்
கீழ் 3மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். பின் சுந்தர
மகாலிங்கத்திடமிருந்த செல்போனையும், மோட்டார்சைக்கிளையும் பறித்துக்
கொண்டு மின்னல்வேகத்தில் மறைந்தனர்.
இது சம்மந்தமாக ,
சமயநல்லூர்
போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தார்.
இந் நிலையில், நேற்று ரயில்வேமேம்பாலப்பகுதியில் ரோந்து சென்றபோது
சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த சமயநல்லூ
ரை சேர்ந்த 17வயது
சிறுவன்,ஊர்மெச்சிக்குளத்தை சேர்ந்த சூரியா(19)சக்திவெங்கடேஷ்(19) ஆகிய
3 பேரை பிடித்து விசாரணை செய்தததில், சுந்தரமகாலிங்கமிடருந்து வழிபறிசெய்த
செல்போன், மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3பேரையும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் , 17 வயது சிறுவன் மற்றும்
சக்திவெங்டேஷ் ஆகிய 2 பேர் மீது கொலை,வழிப்பறி வழக்குகள் நிலுவையில்
உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: