LatestNews
மதுரையில் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல்…
மதுரையில் ஐந்து கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
மதுரை டிச 2.மதுரையில் ஐந்து கிலோ கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தத்தநேரி கே. டி. கே .தங்கமணி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை சேர்ந்த பாலாஜி என்ற மெட்ராஸ் பாலாஜி 29 மற்றும் பீ.பீகுளம் அண்ணாநகரைச்சேர்ந்தராம்குமார் என்ற போதைகுமார்23 இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மதுரையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 5 பேர் கைது
மதுரை டிச 2. மதுரையில்பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் அதிரடியாக சோதனை இறங்கினர்.இந்தசோதனையில் சீமான் நகர் கன்னிச்சாமி 62 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏழு பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடச்சநேந்தல் குட்ட நாயக்கன் தெருவில் விற்பனை செய்த கருப்பையா 50 அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்துபத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.வைகை ஆற்றின் கரையோரம் விற்பனை செய்த துளசி மணிகண்டன் 32 இவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மூன்று பாட்டில்களையும் ரூபாய் இருநூறையும்யும் கைப்பற்றினர். ஜிஎஸ்டி ரோட்டில் விற்பனை செய்த வல்லரசு 45 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 பாட்டில்களையும் கருப்பாயூரணி பள்ளிக்கூடம் அருகே விற்பனை செய்த சண்முகம் 35 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆறு பாட்டில்களில் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகரில் கோயில் உண்டியல் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
மதுரை டிசம்பர் 2 அண்ணா நகரில் கோயில் உண்டியலை திருடியது ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவில் உண்டியலை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயலாளர் முத்து குமார் கொடுத்த புகாரின் பேரில்அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஒருவர் கைது.
மதுரை டிச 2 மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில்த்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை காமராஜர் சாலை பிபி குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 59.இவர் தினந்தோறும் மாட்டுத்தாவணி பூ மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவந்தார். இந்த தகவல் அண்ணாநகர் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் நேற்று ரவிச்சந்திரன் லாட்டரி சீட்டு விற்பனை செய்தபோது அவரை பிடித்து அவரிடமிருந்து ஒன்பது சீட்டுகளையும் விற்பனை செய்த பணம்ரூபாய் ஒன்பதாயிரத்தையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மதுரையில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை.. டிச 2 எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட முதியவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருப்பாலை பெரியார் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் ஆண்டி 97. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்குக்கு முன்பாக தவறி விழுந்ததில்வலது கையில் முறிவு ஏற்பட்டது .இதனால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான ஆண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரைதிருப்பாலை பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் ஆடைகளைக் கிழித்த போதை ஆசாமிக்கு வலைவீச்சு
மதுரை டிச 21மதுரை திருப்பாலைபகுதியில் சாலைநடந்து சென்ற பெண்ணின் ஆடைகளைக் கிழித்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பாலைஜவகர் புரம் ரோட்டில் நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரைஅந்த வழியாக வந்த போதை ஆசாமி அவரை அசிங்கமாக பேசியதோடு மட்டுமல்லாமல் அவருடைய உடைகள் தாறுமாறாக கிழித்து விட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அந்த செயலில் ஈடுபட்டவர் அழகுமலை மகன் கரந்தமலை என்று தெரிய வந்தது. அவரை தேடி வருகின்றனர்.மது
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.