Connect with us

LatestNews

செல்வ மகள்கட்டிய பாலம்.

Published

on

அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்!’- சுலோச்சன முதலியார் பாலத்தில் பெருமையுடன் நடந்து சென்ற வாரிசுகள்

நெல்லைக்கு அடையாளமாக விளங்குவது சுலோச்சன முதலியார் பாலம். தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நெல்லை பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கிறது. பாலம் கட்டுவதற்கு முன்பு பரிசல்களில்தான் மக்கள் இந்த பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தனர். கடந்த 1840 ஆம் ஆண்டு நெல்லை ஆட்சியராக இருந்த தாம்சன் இங்கு பாலம் கட்ட முடிவு செய்தார். அதே வேளையில், நிதி இல்லை. அப்போதுதான், சுலோசனா முதலியார் தன் மனைவியின் நகைகள் , சொத்துகளை விற்று முதலில் ரூ. 40. 000 அடுத்து 8,500 என்று நன்கொடையாக அளித்தார்.

இத்தனைக்கும் சுலோச்சன முதலியாரின் பூர்வீகம் நெல்லை அல்ல. காஞ்சிபுரம் மாவட்டம் திருமணம் என்ற ஊர்தான் அவரின் பூர்வீகம். ஆனாலும், நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் கொளரவ பணியாக சிரஸ்தாராக இருந்தார். இதனால், குடும்பம் நெல்லையிலேயே தங்கி விட்டது. சுலோச்சன முதலியார் கொடுத்த நிதியால் கட்டப்பட்ட அந்த பாலம் 1843 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வந்தது. பாலத்துக்கு அவரின் பெயரே சூட்டப்பட்டது. இதற்காக, ஆட்சியர் தாம்சன் சுலோசனா முதலியாருக்கு செப்பு பட்டயம் ஒன்றை வழங்கியிருந்தார். பாலத்திலும் அவரின் பெயரே பதிக்கப்பட்டது. தற்போது, அந்த செப்புப்பட்டயத்தை சுலோச்சன முதலியாரின் வாரிசு பக்தவச்சலம் என்பவர் பாதுகாத்து வருகிறார்.image

சமீபத்தில் பாலம் கட்டப்பட்டு 178 ஆம் ஆண்டு தொடக்க விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுலோசனா முதலியாரின் பேரன் பக்தவச்சலம்( வயது 63) அவரது மனைவி கமலா, மகள் கிருத்திகா, கமலாவின் தம்பி ரமணன் ஆகியோர் முதன் முறையாக பங்கேற்றனர்.திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, அவர்களுக்கு சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில், பாலம் குறித்த சி.டி., வெளியிடப்பட்டது. பிறகு, பாலத்தில் சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் பெருமையுடன் நடந்து சென்று தாமிரபரணி ஆற்றை ரசித்தனர்.

சுலோச்சன முதலியாரின் தந்தை ராமலிங்க முதலியார் வீரபாண்டிய கட்ட பொம்மன் மற்றும் பானர்மேன் இடையே மொழி பெயர்ப்பாளராக இருந்தவர். திருமணம் கிராமத்தை சேர்ந்த செல்வந்தர் குடும்பம். தந்தையின் பணிக்காக, நெல்லை குடி பெயர்ந்தனர்.

சுலோச்சன முதலியாரின் 6வது தலைமுறை பேரனான பக்தவச்சலம் கூறுகையில்,”கடந்த 1964 வரை திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வசித்தேன் .சொந்த ஊரான திருமணம் சென்று விட்டோம். திருக்கழுக்குன்றத்தில் தபால் நிலையத்தில் பணியாற்றுகிறேன்.வாடகை வீட்டில் வசிக்கிறோம். மகள் கிருத்திகா எம்.ஏ., படித்துள்ளார். மகளுக்கு அரசுப்பணி கிடைத்தால் உதவியாக இருக்கும் ” என்றார்.

பக்தவச்சலத்தின் மனைவி கமலா கூறுகையில், எங்க வீட்டுக்கு வந்த ஒருத்தர் 10 லட்சம் ரூபாய் தர்றேன்.அந்த தாமிரப் பட்டயத்தை கொடுங்க எனக் கேட்டார்.தர மறுத்து விட்டோம்.அவரது வாரிசு என்பதற்கு ஒரே ஆதாரம் இதுதானே .இந்த பாலத்தோட ஒரிஜினல் வரைபடத்தைக்கூட கரையான் அரிக்காமல் பாதுகாத்து வந்தோம்" என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

K c கந்தசாமி

பெருந்துறை

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

யாகசாலை அமைக்கும் பணி

Published

on

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது சிறுவர் சிறுமியர்கள் குடங்கள் எடுத்து வருகின்றனர் சோழவந்தான் ஜன 22 சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதையொட்டி நாளை காலை 5 மணி அளவில் யாக பூஜை தொடங்குகிறது 9 மணியளவில் வைகை ஆற்றில் சிறுவர் சிறுமியர்கள் தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோவிலை வந்து அடைந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது நாளை மறுநாள் தொடர்ந்து யாக பூஜை நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூஜை தொடங்கி ஒன்பது ஐந்து மணியிலிருந்து ஒன்பது 55 மணிக்குள் ராஜகோபுரம் விமானம் மும்மூர்த்தி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதைத் தொடர்ந்து விநாயகர் முருகன் ஜெனகை மாரியம்மன் உட்பட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது விழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சுப்ரமணியன் செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ இணைச்செயலாளர் கொரியர் கணேசன் உதவி தலைவர்கள் முருகேசன் மணி என்ற முத்தையா பால்பாண்டி சின்னப்பாண்டி ஜவகர் செயல் அலுவலர்கள் இளஞ்செழியன் இளமதி ஆலயப் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் செய்து வருகின்றனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் சமையல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆலோசனை பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் பேரூராட்சி இருந்து சுகாதார ஏற்பாடு கூடுதல் திருவிளக்கு கூடுதல் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் செய்து வருகின்றனர் சோழவந்தான் அரசு பஸ் டிப்போவில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் படவிளக்கம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்

Continue Reading

LatestNews

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்…

Published

on

அம்மா அரசு கூட்டுறவு துறையில் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன் உதவி அமைச்சர் செல்லூர் கே ராஜூ பெருமிதம்.
சோழவந்தான் ஜன:

தமிழகத்தில் 1.78 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை வங்கி மூலம் ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி அம்மா அரசு வழங்கியுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சியில் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் கே ராஜூ துவக்கி வைத்து பேசியதாவது கீழமாத்தூர் 20 கிராம மக்கள் உடல்நலம் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் நிதியில் ஆரம்ப சுகாதார நிலையம், இப்பகுதியில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ரூபாய் 45 லட்சம் நிதியில் திட்டப் பணி நடக்கிறது மேலும் 1.60 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ரூபாய் 17.50லட்சம் நிதியில் விரிவாக்க கிரீன் கார்டன் பகுதியில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது இதுவரை 1.58 கோடியில் பாலம் சாலை பேவர் பிளாக் தெரு அமைத்தல் திட்ட பணி நிறைவு பெற்றுள்ளது. காலணி முதல் வைகை ஆற்றின் கரை வரை ரூபாய் 4.60 லட்சம் நிதியில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நிறைவு மேலமாத்தூர் இல் ரூபாய் 5 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி நிறைவு ரூபாய் 5 லட்சத்தில் நிழற்குட அமைக்கும் பணி 38 குடும்பங்களுக்கு ரூபாய் 1.50 லட்சம் திட்டத்தில் வீடுகள் பணி வழங்கப்பட்டது கீழமாத்தூர் ரூபாய் 52 ஆயிரத்து மின்விளக்குகள் கூடுதலாக இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சிக்காக ரூபாய் 6.18 கோடி பணிகள் நிறைவு பெற்றுள்ளன அம்மா ஆட்சியில் சிறு குறு கிராமங்கள் வரை வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன திமுக ஆட்சி காலத்தில் கிராம மக்களின் மேம்பாடு அடைய பணிகள் செய்யவில்லை திமுக தலைவர்கள் குடும்பங்கள்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்து வளர்ந்து உள்ளனர், தமிழக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை ஆனால் அம்மாவின் அரசு கிராமங்களை தேடிச்சென்று

தாய்ப்பறவை இறைக்காக காத்திருக்கும் குஞ்சுகளை தேடி செல்வது போல் அதிமுக அம்மா அரசு தமிழக மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது என்பது உண்மையாகும்,
இதுவரை நான் வகித்த கூட்டுறவுத்துறை மூலம் 1.78 ஆயிரம் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கி உள்ளோம், கீழமாத்தூரில் கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைந்து உள்ளது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 லட்சம் நிதியில் பூமி பூஜை நடந்து உள்ளது
இது போல் எண்ணற்ற திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அம்மாஅரசு இன்னும் பல பணிகளை தமிழக மக்களுக்காக செய்கிறது எங்களது எஜமானர்களான நீங்கள் தொகுதி மக்கள் மறவாது மீண்டும் அம்மா ஆட்சி தொடர இரட்டை இலைக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார், இந்நிகழ்ச்சியில் கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டி தலைமை வகித்தார் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பரவை ராஜா, வில்லாபுரம் ராஜா, ஊராட்சி தலைவர்கள் கந்தசாமி அபிராமி மணிகண்டன் கிளைச் செயலாளர் சாகுல் மைதீன் அஜ்மீர் தங்கராஜ் சண்முகநாதன் கருப்பணன் கூட்டுறவு துறை வங்கி தலைவர் முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

22 January, 2021 13:28

Published

on

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் என தமிழக தொல்லியல்த்துறை இணை இயக்குனர் சிவானந்தம் தகவல்

கீழடி :

சிவகங்கை மாவட்டம்
கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம்

7 ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசின் தொல்லியல்த்துறை அனுமதி அளித்து உள்ளது

அகழாய்வு தொடங்கப்படும் தேதியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும்

2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்று உள்ளது

இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் நகர நாகரீகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

தங்கப் பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

‘தல’ யின் அடுத்த படம்! இவர் தான் இயக்குனர்!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தல’ யின் அடுத்த படம்! இவர் தான் இயக்குனர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

கோடி வசூல்.. வியாபார தந்திரமா? காற்றாடிய தியேட்டரால் ரத்தான மாஸ்டர் திரைப்படம்!

காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்யப்படவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது கோடி வசூல்.. வியாபார தந்திரமா? காற்றாடிய தியேட்டரால் ரத்தான மாஸ்டர் திரைப்படம்!… [...]

சசிகலாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் சசிகலாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

முத்தூட் பைனான்ஸில் 7  கோடி நகை கொள்ளை! துப்பாக்கி காட்டி துணிகரம்!

பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று கொள்ளையடித்துள்ளனர். முத்தூட் பைனான்ஸில் 7 கோடி நகை கொள்ளை! துப்பாக்கி காட்டி துணிகரம்!… [...]

இதெல்லாம் இருந்தா பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க..: பள்ளி கல்வித்துறை!

தற்பொழுது பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களுக்கு சில எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் இருந்தா பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க..: பள்ளி கல்வித்துறை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: