கடன்..தற்கொலை..குடும்பமே

‘அப்பாவைப் பிரிந்து இருக்க முடியல, அவர்கிட்டயே போறோம்…’ – மதுரையில் குடும்பமே தற்கொலை!


துரையில் தந்தை இறந்த சோகத்தில், வளர்ப்பு நாய்க்கு விஷம் வைத்துவிட்டு தனது தாயுடன் இரண்டு மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அருண்பாண்டியன் கட்டட ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார். அருண்பாண்டியனுக்குத் தலையில் கட்டி ஏற்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனைவி வளர்மதி ((38), மகள்கள் அகிலா ((20) மற்றும் ப்ரீத்தி (17) ஆகியோருடன் மதுரையில் மலைச்சாமிபுரம் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். கடந்த ஜூலை மாதத்தில் அருண்பாண்டியனுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் அருண்குமார் உயிரிழந்தார்.

அருண்பாண்டியனின் மறைவு அவரது குடும்பத்தை வெகுவாகப் பாதித்தது. அருண்பாண்டியனின் பிரிவைத் தாங்க முடியாத அவரது மனைவி வளர்மதி, மகள்கள் அகிலா மற்றும் ப்ரீத்தி ஆகிய மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், வளர்த்து வந்த செல்ல நாயையும் விட்டு விட மனமில்லாமல் அதற்கும் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில், ”எங்க அப்பாவ விட்டுட்டு எங்களாள இருக்க முடியல. சோ… அப்பாகிட்ட போறோம்’ என்று மகள்களும், ‘அருண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூடாது. அருண் பாண்டியன் சம்பாதித்த சொத்தை உரிமை கொண்டாட அருண் குடும்பத்து உரிமை இல்லை. என் தாய்தான் கொல்லிவைக்கவேண்டும்” என்று வளர்மதியும் தெரிவித்துள்ளனர்.

கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவி, மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.

K c கந்தசாமி

பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: