மனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..

மதுரையில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலி மருந்து வைத்து கொலை முயற்சி கணவனுக்கு வலை வீச்சு

மதுரை நவ 28 மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலி மருந்து வைத்து கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து கணவரை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரைஅவனியாபுரம் எம்.எம்.சி.காலனியைசேர்ந்தவர் சுடலைமுத்து மனைவி மாலதி 31. இவர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .இரண்டு மகள்கள் உள்ளனர்.சுடலைமுத்துவுக்கு பழக்கம் இருந்து வந்தது.தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக வரதட்சனை என்று கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் சுடலைமுத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து மனைவி மாலதி மற்றும் இரண்டு மகள்களுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக மாலதி அவனியாபுரம் போலீசில்புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் சுடலைமுத்து மற்றும்அவருக்குஉதவியத்க ஐயம்பெருமாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மதுரையில் வீட்டில் தூங்கிய போது தவறி விழுந்த மூதாட்டி பலி

மதுரை நவ 28 படுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
மதுரை காமராஜர் சாலைதூமாட்டி மாட்டி ரங்கசாமி ஐயர் சந்துவை சேர்ந்தவர் பாப்பாத்தி 70 .இவர் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பாப்பாத்தி உயிரிழந்தார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார்வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் பஸ் ஸ்டாப்பில்காத்திருந்த பெண்ணிடம் நகை திருட்டு.

மதுரை நவ 28. மதுரை பஸ்ஸ்டாப்பில் காத்திருந்த பெண்ணிடம் நகையை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் தனம் 63. பிபி சாவடி பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பக்கத்தில் நின்ற மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக தனம் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

மதுரை புட்டுத்தோப்பு வில் தொழிற்சாலைக்குள் புகுந்து இயந்திரங்கள் திருட்டு

மதுரை நவ 28 மதுரை புட்டுத்தோப்புபகுதியில் தொழிற்சாலைக்குள் புகுந்து இயந்திரங்களை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பொன்னகரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் புட்டுத்தோப்புபகுதியில் சிறிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார் .இந்த தொழிற்சாலையில் இருந்த ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரங்கள் திருடு போய்விட்டது. இதுகுறித்து விசாரித்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது .இந்த சம்பவம் குறித்து ரமேஷ் கரிமேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி பலி

மதுரை நவ 28 மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி பலியானார்.
மதுரை.நவ.28.
மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் ரித்திகா 8. நேற்று வில்லாபுரம் மெயின் ரோடு கற்பக விநாயகர் கோவில் தெரு அருகே பாண்டியராஜன் டூவீலரை ஓட்டிச் சென்றார். இவரது மகள் வித்யா பின்னால் அமர்ந்து சென்றார் .சம்பவ இடத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதி இருவரும்.தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயேரித்திகா பலியானார். மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்டது. இந்த விபத்து தொடர்பாக பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோதிய கவனத்தையும் தேடி வருகின்றனர்.

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி மற்றும் சிறுவன் உள்பட 6 பேர் கைது

மதுரை நவ 28 மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த
மூதாட்டி மற்றும் சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சாலை முத்து பாலத்தின் அடிப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சோலை அழகுபுரம் தைச் சேர்ந்த ஆனந்தராஜ் 19 என்பவரை ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.எஸ் எஸ் காலனி போலீசார் மாடக்குளம் மெயின் ரோடு நேரு நகர் சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த சித்தன் என்ற வினோத் 34 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தல்லாகுளம் போலீசார் டி ஆர் ஓ காலனி அருகே கஞ்சா விற்பனை செய்தசிறுவனை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.செல்லூர் போலீசார் போஸ் வீதியில் விற்பனை செய்த முத்து மணிகண்டன் 27 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கே.புதூர் போலீசார் ராமவர்மா நகர் 2வது தெருவில் விற்பனை செய்த மூதாட்டி மொக்கத்தாய் 71 இவரை கைது செய்து அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் போலீசார் வண்டியூர்அம்மையப்பன்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குழந்தைசாமி தெருவை சேர்ந்த சரவணன் என்ற நரிக்குட்டி 44 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: