வீடுகளுக்குள் மழைநீர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிர்தப்பிய மூதாட்டி பார்வையிட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி தவிக்கின்றன. மின்சார வயர்கள் அறுந்து நீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. சுமார் 5க்கும் மேற்பட்ட சுவர் இடிந்து உள்ளது இதற்கு காரணம் ஊருக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் தூர்வாராததே காரணம் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரி செல்லையா, வருவாய் ஆய்வாளர் ராஜன் ஆகியோரை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இதுபோன்ற சிரமத்தில் இருப்பதால் அரசும் ,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து சுற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இடிந்த சுவர்களுக்கு அரசின் சார்பில் ஏதாவது எதாவது நிவாரணம் வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: