Connect with us

LatestNews

சிறுமிக்கு திருமணம் 3 பேர் கைது…

Published

on

மதுரைஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உள்பட 3 பேர் கைது
மதுரை நவ 27 மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்த பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிறுமிக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் பெண்கள் நல அதிகாரி யோகம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரி யோகம்மாள் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை பொன்னேரி சொக்கலிங்க நகரைச் சேர்ந்த பாண்டி மகன் வினோத்குமார் 27 வினோத் குமாரின் தாய் ராஜேஸ்வரி 45 மற்றும் உறவினர் சுமதி 43 ஆகிய மூன்று பேரையும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை

மதுரை நவ 27 தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை குருவிக்காரன் சாலை கிருஷ்ணதேவர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சாதிக்அக்தார் 22. இவருடைய தந்தை அப்துல் அஜீஸ். தந்தைக்கு குடி பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தை மறந்து விடும்படி மகன் தந்தைக்கு அறிவுறுத்தி வந்தார். ஆனால் தந்தை குடிப்பழக்கத்தை விடவில்லை. இதனால் மனமுடைந்த மகன் சாதிக்அக்தார்விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால்சிகிச்சை பலனின்றி பரிதாபமாக்வர் உயிர் இழந்தார் .இந்த சம்பவம் குறித்து தந்தை அப்துல்அஜிஸ் கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
மதுரை நவ 28 பெரியார் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி 51 இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் இவர் மதுரையில் கட்டிட வேலைக்காக பெரியார் பேருந்து நிலையம் அருகே மெயின் ரோட்டில் நடந்து சென்றார் அப்போது திடீரென்று மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது இது குறித்து மனைவி அழகுநாச்சி கொடுத்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி
மதுரை நவ 27 மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலியானார்.
மதுரை கே புதூர் ஜவஹர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 73 இவர் கோகலே மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால்செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் இவர்மீது மோதியது யார் எந்த வாகனம் என்று தெரியவில்லை .இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை வண்டியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
மதுரை நவ 27 வண்டியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வண்டியூர் பகுதியிலீ உள்ள ஒரு தியேட்டரின் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்தபோது கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விற்பனை செய்த சுரேஷ் 23 என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மூவர் விஷமருந்தி பலி

Published

on

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை

இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 65 )பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார் கொரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்

இந்த நிலையில் நேற்று இராஜபாளையத்தில் குருபையா ராஜா தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா இவரது மனைவி கலாவதி (வயது 45 )இவரது மகன் சித்தார்த் (17வயது )இவர்கள் 3 பேரும் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்

இதில் 3 பேரும் விஷம் அருந்தியது விடுதி ஊழியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மூன்று பேரையும் காப்பாற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர் சிறுவன் சித்தார்த் விடுதியிலே உயிரிழந்ததுள்ளது தெரிய வந்துள்ளது ஜனார்த்தனா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார் ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

LatestNews

ஜல்லிக்கட்டில் முதல் பரிசு

Published

on

பாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் பரிசு காரும் காங்கேயம் பசுக்களும்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும் காளைகளுக்கு காங்கேயம் பசுமாடு பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பாலமேடு. இந்த கிராமத்தின் மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும் காளைகளும் களமிறங்குகின்றனர். இதுவரை 651 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர்.

ஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்ட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையைப் பொறுத்து, வீரர்கள் மற்றும் காளை மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும்.

காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் காளைகளை அழைத்துச் செல்ல 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.

வீரர்களுக்கு போக்குவரத்து போலீசார் முன்னிலையில் மது போதை பரிசோதனை, செய்யப்பட்டு, இரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் , உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா எனவும் சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டீ-சர்ட் அணிந்து ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் தொடங்கும்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு எல்.இ.டி.டி வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில். மெத்தை, சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெற்று அதிக காளை மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக வேகன் – ஆர் – காரும் சிறப்பாக விளையாடும் காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், தலைமையில், டிஐஜி ராஜேந்திரன், 3 எஸ்பிக்கள், 7 ADSPக்கள், 32 DSPக்கள், 65 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மதுரை மாவட்ட காவல்துறை பாலமேடு ஜல்லிக்கட்டை முகநூல், யூ டுயூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலை செய்கிறது.

Continue Reading

LatestNews

பொங்கல் விழாவில் ராகுல்…

Published

on

மதுரை அருகே தென்பழஞ்சியில் பொங்கல் விழாவில் பங்கேற்று சகஜமாக நாற்காலியில் அமர்ந்து உணவறிந்தனராம், ராகுல் காந்தி எம்.பி.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஜன.15: தமிழகத்தில் 621   பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.15: தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

காதலன் வெளியிட்ட அந்தரங்க புகைப்படம்! அதிர்ச்சியில் 16 வயது சிறுமி தீயிட்டு தற்கொலை!

அந்த பெண்ணின் 17 வயதான காதலன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த போட்டோக்களை அந்த பகுதியில் இருக்கும் பலரிடம் காண்பித்துள்ளார். காதலன் வெளியிட்ட அந்தரங்க புகைப்படம்! அதிர்ச்சியில்… [...]

மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல.. தலைவர்: கமல்ஹாசன்!

பிரதமர் மோடிக்கு அவர் வெளிப்படையாக புகழாரம் சூட்டியே, இந்தப் பேட்டியில் பேசினார். மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல.. தலைவர்: கமல்ஹாசன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]

குளிக்க சென்ற இளைஞர் வழுக்கி விழுந்து மரணம்!

பொதுமக்கள் வந்து தண்ணீருக்கடியில் இருந்து அஜய்யை இழுத்து பாறை மீது போட்டுள்ளனர் குளிக்க சென்ற இளைஞர் வழுக்கி விழுந்து மரணம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

இந்தியா முழுதுமுள்ள இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும்: மோடி!

இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இந்தியா முழுதுமுள்ள இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும்: மோடி! முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: