Connect with us

LatestNews

மாணவிக்கு திருமணம் பெற்றோர்கள் கைது

Published

on

மதுரை அருகே பிளஸ் 1 மாணவிக்கு திருமணம் பெற்றோர்கள் கைது

மதுரை நவ 25 மதுரை அருகே பிளஸ் 1 மாணவிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி இவர் திருப்பூரில் பிளஸ் 1 படித்து வந்தார் இவருக்கு பொதும்பு வை சேர்ந்த சடையாண்டி 30 என்பவரை இருவீட்டாரும் நிச்சயம் செய்து சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை விரும்பாத மாணவிக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தொடர்பு கொண்டு அவரை செல்போனில் புகார் செய்தார்.இது தொடர்பாக அவர்கள் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மகளிர் போலீசார் திருமணம் தொடர்பாக மாப்பிள்ளை சடையாண்டி பெற்றோர் பரமசாமி மற்றும் மாணவியின் பெற்றோர் வள்ளியம்மாள் ஆகிய மூவரை கைது செய்தனர்.

மதுரையில கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
மதுரை நவ 25 மதுரை தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் கஞ்சா விற்பனை செய்தல் மற்றும் ரவுடிகளை கைதுசெய்ய போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று தத்தநேரி வைகை வடகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தவ சந்திரன் 36 என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை செல்லூர்போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் மொத்த வியாபார கடையில் திருடிய ஊழியர் கைது
மதுரை நவ 25 மொத்த வியாபார கடையில் சிகரெட் பண்டல்கள் திருடிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை கோமதிபுரம் ஆவின் நகரைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா .இவர் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் பீடி சிகரட் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இங்கு செல்லூரை சேர்ந்த சிவா என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடையில் சிகரெட் பண்டல்களை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 3 ண்டல்களை திருடியபோது மாட்டிக்கொண்டார். இந்த திருட்டு தொடர்பாக ஷேக் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் சிவாவை கைது செய்தனர்.

மதுரையில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்த கணவர் தீக்குளித்து சாவு.

மதுரை நவ 25 மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்த கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை யாகப்பா நகரை சேர்ந்தவர் கலைவாணன் 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது .அதன் காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்தார். பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவியின் வீட்டிற்குச் சென்று சேர்ந்து வாழ அழைத்தார் .அதற்கு மனைவி மறுத்து விட்டதால் மனம் உடைந்த கலைவாணன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயமடைந்த கலைவாணனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading

LatestNews

திடீரென வீடு இடிந்து விழுந்தது…

Published

on

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Continue Reading

LatestNews

ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

Published

on

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்!

பயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள். தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்! முதலில் தினசரி தமிழ்… [...]

ஜன.20: தமிழகத்தில் 549   பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.20: தமிழகத்தில் 549 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு!

இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு! முதலில்… [...]

லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான  பிட்ட கதலு டீஸர் வெளியீடு!

காதல்… காமம்… துரோகம் என பாலியல் ரீதியான அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர்… [...]

மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை!

யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: