Connect with us

LatestNews

ரவுடிகள் கைது..

Published

on

போலீஸ் கமிஷனர் உத்தரவில் 13 ரவுடிகள் கைது பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் தனிப்படை அதிரடி வேட்டை
மதுரை நவ 24
மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 ரவுடிகள் கைது தனிப் படையினர் அதிரடி வேட்டை
மதுரையில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக 7 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை ஒருவர் விடாமல் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படையை சட்டம்ஒழுங்கு துணை கமிஷனர் சிவபிரசாத் கண்காணித்து வருகிறார். மதுரையில் அனைத்து பகுதிகளிலும் இந்த 7 தனிப்படைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடியாக ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்‌ இவ்வாறாக வைகை வடகரை மதீனா பள்ளிவாசல் அருகே பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்கள் உள்பட ஒன்பது ரவுடிகளை கைது செய்து அவர்களிடமிருந்து வாள் அரிவாள் இரண்டு கத்திகள் துண்டுகள் மிளகாய் பொடி பாக்கெட் மூன்று இவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு வைகை வடகரை கள்ளுக்கடை சந்துவை சேர்ந்த பாண்டி மகன் மணி பாண்டி 23 ரவுடி ஆவார் ,அதேபகுதியைசேர்ந்த முத்துராமன் மகன் சதீஷ் என்ற சுருட்டை சதீஷ் 22 ,மீனாட்சி சுந்தரம் என்ற மெட்ராஸ் , மற்றொருவர் 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர். மற்றொரு நபர் முகேஷ் என்ற மூக்கன் 21, மற்றொருவர் 17 வயது சிறுவன் அடுத்ததாக கைது செய்யப்பட்டவரும் 17 வயது சிறுவன் அவரைதொடர்ந்து பிரபாகரன் மகன் நாகேஸ்வரன் என்ற நாகேஷ் 19 ,சூர்யா என்ற போக்கிரி 24 ஆகிய 9 பேரை கைது செய்தனர்.இதுபோலமஸ்த்ன்பட்டி ஆலமரம் அருகே பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர் .அவர்கள் பெயர் வருமாறு வண்டியூர் சங்கு நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் 25, காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சேர்ந்தூர் மகன் துரைமுருகன் 25, காமராஜபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ராமர் 24, காமராஜபுரம் குமரன் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் திருப்பதி 40 ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் இருந்த காமராஜர் கக்கன் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்து மணி 24 காமராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் மகன் நல்லுசாமி 25 இந்த இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர் அவர்களை தேடி வருகின்றனர்.

மதுரை ஐயர் பங்களாவில் வீட்டு உபயோக பொருள்கள் கடையை உடைத்து திருட்டு

மதுரை நவ 24 மதுரை ஐயர் பங்களாவில்வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் கடை யைஉடைத்து திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உமச்சிகுளம் கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் மீரான் சித்திக் ராஜா 35 .இவர் ஆணையூர் மெயின் ரோடு ம அய்யர்பங்களாவில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு மறுநாள் திறக்க வந்தபோது கடையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது.கடையில் வைத்திருந்த மிக்ஸி, செல்போன் ,டார்ச் லைட் ,மற்றும் அழகு சாதன பொருட்கள், பணம் ரூபாய் 2000ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மீரான் சித்திக் ராஜா கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மதுரை ரிங் ரோட்டில் பைக்குகள் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார்.

மதுரை நவ 24 மதுரைரிங் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை அருகே விரகனூர் வைகை காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் 34. இவர் நேற்று இரவு சிவகங்கை ரிங் ரோடு சந்திப்பில் செக்போஸ்ட் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொருவர் ஓட்டிவந்தபைக் நேருக்கு நேர் மோதியது .இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை மோதிய பைக்கைஓட்டிச் சென்றவர் யார் என்று தெரியவில்லை .இந்த விபத்து தொடர்பாக மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் மனைவி நோய்வாய்ப்பட்டதால் மனமுடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை நவ 24 மனைவி நோய்வாய்ப்பட்ட தால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை கே புதூர் சிவந்தி கோனார் ஆறாவது தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன் 56. இவருடைய மனைவி நோய்வாய்ப்பட்டு மனநோயால் மற்றும் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் மனமுடைந்த கணவர் புவனேஸ்வரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து கே புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading

LatestNews

திடீரென வீடு இடிந்து விழுந்தது…

Published

on

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Continue Reading

LatestNews

ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

Published

on

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்!

பயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள். தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்! முதலில் தினசரி தமிழ்… [...]

ஜன.20: தமிழகத்தில் 549   பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.20: தமிழகத்தில் 549 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு!

இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு! முதலில்… [...]

லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான  பிட்ட கதலு டீஸர் வெளியீடு!

காதல்… காமம்… துரோகம் என பாலியல் ரீதியான அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர்… [...]

மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை!

யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: