LatestNews
யாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்….
*யானையை வைத்து பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார்*
*திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானையை சேர்க்க உத்தரவிடக்கோரி மேலூர் மாஜிஸ்திரேட்டுக்கு வன அலுவலர் கடிதம்.*
மதுரை:
மதுரை வன உயிரினச்சரகத்தின் அலுவலர் மணிகண்டன், மேலூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது,
வன உயிரின சரகத்தில் கடந்த 21ந்தேதி காலையில் சுமதி என்ற பெண் வளர்ப்பு யானையை அதன் இருப்பிடத்தில் இருந்து ரோட்டில் இருக்கும் பொதுமக்கள் சிறுவர்களிடம் காணிக்கை பெற வைப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வன அலுவலர்கள் சுகன்யா, சோபனா, மஞ்சுளாதேவி, வனக்காப்பாளர் வினோத்குமார் ஆகியோருடன் நானும் சம்பந்தப்பட்ட யானைகளின் இருப்பிடமான புலிப்பட்டியை அடைந்து பார்த்தோம். அங்கு சுமதி யானை இல்லை.
இதையடுத்து அந்த யானையின் பாகன் மற்றும் பராமரிப்பாளர்,மதன்பாபு ஆகியோர் கிடாரிப்பட்டியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் யானையை வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
பின்னர் அங்கு சென்றபோது, யானையின் பாகன் மற்றும் பராமரிப்பாளர் மதன்பாபு, மற்றொரு பாகன் முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரித்தோம்.
அவர்கள்
யானையை மேலூர்,அழகர்கோவில் சாலையில் நடைபயிற்சிக்காக அழைத்து சென்றபோது ஏ.வள்ளலாபட்டி பகுதியில் பொதுமக்கள், சிறுவர்கள் யானையிடம் ஆசீர்வாதம் பெற்றதையும், அவர்களிடம் யானை காணிக்கை பெற்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் விதிகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கூறிய குற்றம், தண்டனைக்குரியது. எனவே இந்த யானையை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?