தீக்குளிக்க முயற்சி

மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் கோபால்சாமி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது அதனை அவரது உறவினர் மற்றும் அந்த ஊர் வாயிலை தலையாரி மதிவாணன் மற்றும் சிலர் அபகரித்து உள்ளனர் இதுபற்றி கோபால்சாமி கேட்டபோது அவரை கத்தியால் குத்தி உள்ளனர் கத்திக்குத்து காயத்துடன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது சம்பந்தமாக 18 9 2020 மதுரை கலெக்டர் மாவட்ட எஸ்பி ஐஜி டிஜிபி என சிஎம் செல் என அனைவரிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தனக்கு நியாயம் கிடைக்க கோரி நேற்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் வந்த கோபால்சாமி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அலுவலக நுழைவுவாயில் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் அருகில் இருந்த போலீசார் அவரை மீட்டு தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: