Connect with us

LatestNews

கதவு உடைப்பு ..இருவர் கைது..

Published

on

மதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது
மதுர நவ 22 முன்விரோதத்தில் வீட்டின் கதவை உடைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை பீபிகுளம் காந்திஜிதெருவைச் சேர்ந்தவர் மாலதி 35 இவர் வீட்டில் தனியாக இருந்த போது திருப்புவனத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் 24 மற்றும் மதுரை பீபீ குளம் காந்திஜி தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி 54 இவர்களுடன் மேலும் இரண்டு பேர் திடீரென்று கடப்பாரையுடன் வந்து பட்டப்பகலில் மாலதி வீட்டின் கதவை உடைக்க தொடங்கினர் .இதை தட்டி கேட்ட மாலதியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசில் ம்லதாபுகார் செய்தார்‌ போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ் 24 மகாலட்சுமி 54 ஆகாய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர்கைது

மதுரை நவ 22 .12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை 60 என்ற முதியவர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் .பின்னர் சிறுமி கூச்சல் போடவே அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் அறிந்த சிறுமியின் தாயார்தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் பிச்சையை கைது செய்தனர்.

மதுரையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை நவ 22 கடன் தொல்லையால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கணபதிஉமா 32 .ய இவர் ஆன்லைன் மூலம் கடன் பெற்றிருந்தார்.அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது

மதுரை நவ 22 ஜெய்ஹிந்து புரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 2வது மெயின் ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சரவணன் 56 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மற்றொரு பகுதியான பாரதியார் ரோட்டில் விற்பனை செய்த சோலை அழகுபுரம் தைச் சேர்ந்த ராஜன் 67 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி போலீஸ் விசாரணை

மதுரை நவ 22 இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை பசுமலை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் 33. இவரிடம் இலவச பட்டா வாங்கி தருவதாக பொன்ராஜ், பூமி, கண்ணன் உள்பட மொத்தம் ஆறு பேர் கூறியுள்ளனர். அதற்காக ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பட்டா கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதை அறிந்த பழனிவேல், பொன்ராஜ் , கண்ணன் தரப்பினரிடம் கேட்டபோது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பழனிவேல் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார்பொன்ராஜ், பூமி, கண்ணன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் ஆட்டுக் கிடாய் சண்டை நடத்திய நான்கு வாலிபர்கள் கைது

மதுரை நவ 24 மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் ஆட்டுக் கிடாய் சண்டை நடத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை எல்லீஸ் நகர் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே ஆட்டுக்கிடாய் சண்டை நடப்பதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு ஆட்டுக் கிடாய் சண்டை நடத்தியது தெரிய வந்தது .இந்த சண்டையை நடத்திய அன்சாரி நகர் 7வது தெருவை சேர்ந்த முகமது ஆரிப் 21 எல்லிஸ் நகர் பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்த சிவகுமார் 39 பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த கணபதி 23எல்லீஸ் நகர் வ.உ.சி தெருவை சேர்ந்த விக்னேஷ் 26 ஆகிய 4 பேரையும் எஸ் எஸ் காலனி போலீசார் கைது செய்தனர்.

மதுரை உத்தங்குடியில் வீட்டை உடைத்து 30,000 திருட்டு மர்ம ஆசாமி கைவரிசை

மதுரை நவ 22 மதுரை உத்தங்குடி பகுதியில் வீட்டை உடைத்து 30,000 திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை உத்தங்குடி வளர் நகரை சேர்ந்தவர் வினோத் குமார் 31 .இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 30 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக வினோத்குமார் புதூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மதுரையில் 2 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
மதுரை நவ 22 மதுரையில் 2 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை நரிமேடு பி.டி.ராஜன் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த நிதிஷ்குமார் 21 என்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோஇருநூற்றுஐம்பதுகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதுபோல பைபாஸ் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த வரதராஜ் அஜித்குமார் 23 என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .மற்றொரு பகுதியான விளாங்குடி நேருநகரில் முத்தையா 32 என்பவரிடம் 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கண்பார்வையற்ற மூதாட்டி மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்ததால் தீப்பிடித்து சாவு

மதுரை நவ 22 தூங்கிக்கொண்டிருந்த கண்பார்வையற்ற மூதாட்டி மண்ணெண்னைவி ளக்கு தவறி விழுந்
து தீப்பிடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை அருகே இடையப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னம்மாள் 77 .இவருக்கு வயது முதிர்வு காரணமாக கண்பார்வை தெரியவில்லை.இந் நிலையில் நேற்று இரவு வீட்டில் மண்ணெண்னை விளக்கை பற்ற வைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அப்போது விளக்கு தவறி விழுந்து சின்னம்மாள் ஆடையில் தீப்பற்றியது. இதில் தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே கார் கவிழ்ந்து டிரைவர் பலி திருமணத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து

மதுரை நவ 22 மதுரை அருகே கார் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்தது

விருதுநகர் மாவட்டம் பனையாடிபட்டி ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சின்னத்தம்பி. இவர் குடும்பத்துடன் ஊட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு டாட்டா சுமோவில் சென்றிருந்தார். பின்னர் திருமணம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலையில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்தவிபத்தில் கார் ஓட்டிச் சென்ற சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading

LatestNews

திடீரென வீடு இடிந்து விழுந்தது…

Published

on

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Continue Reading

LatestNews

ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

Published

on

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்!

பயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள். தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்! முதலில் தினசரி தமிழ்… [...]

ஜன.20: தமிழகத்தில் 549   பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.20: தமிழகத்தில் 549 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு!

இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு! முதலில்… [...]

லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான  பிட்ட கதலு டீஸர் வெளியீடு!

காதல்… காமம்… துரோகம் என பாலியல் ரீதியான அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர்… [...]

மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை!

யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: