மாநில அளவிலான சிபிஸ் ஒழிப்பு இயக்கம்..

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிபிஎஸ் ஒழிப்பு இயக்க கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பவுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.

மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை ஏற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஜெயராஜராஜேஸ்வரன ஆலோசனை கூட்டத்தைத் துவக்கி வைத்து பேசினார்.

17 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள் ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மாநில/மாவட்ட அளவிலான அமைப்பை உருவாக்குவது.
25.11.2020 அன்று
தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கம்
30.11.2020 முதல் 02.12.2020 வரை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பவும் இயக்கம்

29.11.2020 மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: