Connect with us

LatestNews

ஜவுளிக் கடையில் தீ விபத்து..

Published

on

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம்

மதுரை :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளக்கத்தூண் பகுதியில் உள்ள பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான பிரபல ஜவுளிக் கடையில் இஅன்று அதிகாலையில் திடிரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கடை முழுவதிலும் தீ பற்றி எரிய தொடங்கியது இதனையடுத்து பெரியார் பேருந்துநிலையம், மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு அதிகாரிகள் விரைந்துவந்து தீயை அணைத்துவருகின்றனர். கடந்த 2மணி நேர போராட்டத்திற்கு பின் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயணைக்கும் பணிகளில் 10 மேற்பட்ட வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. விளக்கத்தூண் அருகே மீனாட்சியம்மன் கோவில் அருகே மாதத்தில் 3வது முறையாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளியன்று ஜவுளிகடையில் ஏற்பட்ட தீ விபத்து மீட்பு பணியில் சிக்கி இரண்டு வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் எதிரொலியாக அதீத பாதுகாப்புடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தீ விபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருக்கக் கூடிய வணிக வளாகங்கள் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என முதற்கட்டமாக 500 கடைகளுக்கு தீயணைப்புதுறையினர் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading

LatestNews

திடீரென வீடு இடிந்து விழுந்தது…

Published

on

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Continue Reading

LatestNews

ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

Published

on

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒன்னு இல்ல இரண்டு இல்ல ரூ.12 கோடி பரிசு! தென்காசி மாவட்டக்காரருக்கு அடித்த அதிஷ்டம்!

டிக்கெட்டுக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்துள்ளது. ஒன்னு இல்ல இரண்டு இல்ல ரூ.12 கோடி பரிசு! தென்காசி மாவட்டக்காரருக்கு அடித்த அதிஷ்டம்! முதலில் தினசரி தமிழ்… [...]

வீட்டிற்கு இடைஞ்சலாக இருக்கு.. கோவிலை இடித்த நடிகர்!

இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கோயிலை இடித்துள்ளனர். வீட்டிற்கு இடைஞ்சலாக இருக்கு.. கோவிலை இடித்த நடிகர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

இன்னொருத்திய கட்டிப்பேன்.. கணவனின் மிரட்டலால் மனைவி எடுத்த விபரீத முடிவு!

கணவனின் இந்த செயலால் மனமுடைந்த சசிகலா இன்னொருத்திய கட்டிப்பேன்.. கணவனின் மிரட்டலால் மனைவி எடுத்த விபரீத முடிவு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

செய்தது என்ன?.. வியாபாரிகள் கேட்ட கேள்வி! பதிலளிக்க முடியாமல் காரில் ஏறி தப்பியோடிய கனிமொழி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி இன்று தோவாளை மலர் சந்தையில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். செய்தது என்ன?..… [...]

காப்பாவுக்கு வாப்பா என்று அஸ்வினை சீண்டியதற்கு… ஆஸி., பட்ட அவமானம்!

இன்று ட்விட்டர் பதிவுகளில் அமித்ஷா முதற்கொண்டு பலரும் இளம் இந்திய அணியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் காப்பாவுக்கு வாப்பா என்று அஸ்வினை சீண்டியதற்கு… ஆஸி., பட்ட அவமானம்! முதலில்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: