ஜவுளிக் கடையில் தீ விபத்து..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம்

மதுரை :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளக்கத்தூண் பகுதியில் உள்ள பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான பிரபல ஜவுளிக் கடையில் இஅன்று அதிகாலையில் திடிரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கடை முழுவதிலும் தீ பற்றி எரிய தொடங்கியது இதனையடுத்து பெரியார் பேருந்துநிலையம், மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு அதிகாரிகள் விரைந்துவந்து தீயை அணைத்துவருகின்றனர். கடந்த 2மணி நேர போராட்டத்திற்கு பின் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயணைக்கும் பணிகளில் 10 மேற்பட்ட வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. விளக்கத்தூண் அருகே மீனாட்சியம்மன் கோவில் அருகே மாதத்தில் 3வது முறையாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளியன்று ஜவுளிகடையில் ஏற்பட்ட தீ விபத்து மீட்பு பணியில் சிக்கி இரண்டு வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் எதிரொலியாக அதீத பாதுகாப்புடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தீ விபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருக்கக் கூடிய வணிக வளாகங்கள் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என முதற்கட்டமாக 500 கடைகளுக்கு தீயணைப்புதுறையினர் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: