மதுரையில் திமுகவினர் போராட்டம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் 100 நாள் பிரச்சாரத்தை நேற்று திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவங்கினார்,அவரை காவல்துறையினர் நேற்று கைது செய்து விடுதலை செய்தனர், இதைத் தொடர்ந்து இன்று நாகை மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினை மீண்டும் காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து மதுரை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பாக மாவட்ட தலைவர் சௌந்தர் தலைமையில் பெரியார் பேருந்து நிலையம் முக்கிய பிரதான சாலையில் 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரியும் அதிமுக அரசை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர், இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, காவல்துறையினர் தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டக்காரர்கள் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: