இரண்டு கிலோ தங்கம் பறிமுதல்…

*துபாயில் இருந்து ஏர் இந்திய விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் – இரு பெண்கள் கைது*

மதுரை:

துபாயிலிருந்து மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாக்க நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் மதுரை வந்த 133 விமான பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில்,

இந்தநிலையில் மதுரை வந்த திருச்சியை சேர்ந்த திருமதி ஜெயலானி, ஜெயராணி ஆகிய இருவரும் உள்ளாடையில் மறைத்து வைத்து சுமார் ரூபாய் 98 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ தங்கத்தை மெழுகு போன்று வளையும் தன்மை கொண்டதாக மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். மேலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தங்கம் கடத்தி வந்த இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: