ஐயப்பனுக்கு ஆறாட்டு

சோழவந்தான் வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
சோழவந்தான் நவ

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை திருநாள் அன்று வைகையாற்றில் ஐயப்பனுக்கு பக்தர்கள் ஆராட்டு விழா நடத்தினர் சரண கோஷத்துடன் பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர் விழாவையொட்டி ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் சுவாமி சர்வ அலங்காரத்தில் ஊர்வலமாக பக்தர்கள் புடைசூழ வைகை ஆற்றில் எழுந்தருளினார் அங்கு சிவாச்சாரியார்கள் சண்முகவேல் ஐயப்பன் மற்றும் சீனிவாஸ் சுவாமிக்கு பால் தயிர் நெய் மஞ்சள் குங்குமம் உட்பட 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் ஐயப்பனுக்கு ஆற்றில் ஆராட்டு விழா விமரிசையாக நடந்தது அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசித்தனர் பின்னர் தீப ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் ஐயப்பனுக்கு நடந்தது பின்னர் சுவாமி அனைத்து வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் சக்கரவர்த்தி செயலாளர் தாமோதரன் பொருளாளர் ஆர் கே சாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குருமார்கள் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: