முதியவர் தற்கொலை..

மதுரையில் வீட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த முதியவர் மனமுடைந்து தற்கொலை
மதுரை நவ 20. வீட்டில் படியேறும் போது தவறி விழுந்து காயம் அடைந்த முதியவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை கே. புதூர்ஐலன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் 75 ‌இவர் இரண்டு மாதத்திற்கு முன்பாக வீட்டில் படி ஏறியபோது கால் தவறி விழுந்து விட்டார் ‌இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்தகாணப்பட்டார்.இந்நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்‌ அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்‌ அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இருளப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்சாவு குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் ஓட்டல் உரிமையாளரிடம் வாள்முனையில் பணம் பறித்த இரண்டுபேர் கைது.
மதுரை நகர 20. மதுரையில் ஓட்டல் உரிமையாளரிடம் வாள்முனையில் மிரட்டி பணம் பறித்த வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆனையூர் கருப்பசாமி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட்43 .இவர்ஆனையூர் மெயின் ரோடு சிலயநேரியில்ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கரிசல்குளம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுக்ரீவன் 19 மற்றும் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த ராஜ்குமார் 23 ஆகிய இருவரும் வாள் முனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்வர்ட் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மதுரையில்பெண்ணிடம் 28 லட்சம் கடன் பெற்று ஏமாற்றியதாக மற்றொரு பெண் கைது
மதுரை நவ 20 .பெண்ணிடம்28 லட்சம் கடன் பெற்று ஏமாற்றிய மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் 13வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் இந்துலேகா 44. இவரிடம் செல்லூரைச் சேர்ந்த ராதிகா மற்றும் கபில் ஆகிய இருவரும் ரூ 28 லட்சம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் அந்தத் தொகையை அவர்கள்திருப்பி செலுத்தவில்லை. இதை கேட்டுஇந்துஷா தலைவா சென்றபோது அவரை மிரட்டியுள்ளனர் ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் இந்துலேகாபுகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை கைது செய்து மேலும்அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து 45 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
மதுரை நவ 20 மதுரை அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடையை உடைத்துரூபாய் 45000 மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. வழக்கம்போல இந்த கடையை பதினெட்டாம் தேதி இரவு அடைத்துவிட்டு 19ஆம் தேதி வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது .கடையின் உள்ளேஅடுக்கி வைத்திருந்த 237 மதுபாட்டில்கள் இதன் மதிப்பு 44 ஆயிரத்து 590 ஆகும் .இவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மதுரையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது.
மதுரை நகர் 20 பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
மதுரையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் கஞ்சா விற்பனை செய்த முத்துக்குமார் 18 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் திருப்பரங்குன்றம் போலீசார் நடத்திய சோதனையில்சரவண பொய்கை அருகே கஞ்சா விற்பனை செய்த கார்த்திகேயன் 28 என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரை கரிமேடு போலீசார் அந்தோனியார் கோவில் தெரு அருகே விற்பனை செய்த ராணி 61 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மதுரை செல்லூர் போலீசார் நடத்திய சோதனையில் நேரு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிம்ம ராஜா 25 என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் தத்தநேரி சுடுகாடு அருகே விற்பனை செய்த சுப்பிரமணி 38 என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .அகிம்சா புறம் 2வது தெருவில் விற்பனை செய்த வேல்முருகன் 26 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: