ஆற்றில் ரசாயன கலப்பா?

மதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா? என பொதுமக்கள் அச்சம்!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நீரானது வெள்ளப்பெருக்கு எடுத்து வைகையாற்றின் ஓடி வருவதால் ஓபுளா படித்துறை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி வழிந்து ஓடுகிறது. இதனால் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சமீபகாலமாக வைகையாற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்த கழிவு நீர் மற்றும் சிறுசிறு தொழில் செய்யக்கூடிய இடங்களில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதால் வைகை ஆறு மாசடைந்து வருவதாகவும், இந்த ரசாயன கழிவுகளால் தான் நுரை பொங்கி ஓடி வருகிறது என இப்பகுதி மக்கள் அச்சமடைந்துவருகின்றனர். கழிவு நீர் கலக்காதவாறு தூய்மையாக வைகை ஆற்றை பராமரித்து ஆற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் மதுரை மக்களும் தன்னார்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: