மழைநீர் புகுந்தது…

தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் கண்மாய் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் கிராமத்தில் ஜெர்மன் நகர் உள்ளது இங்கு சுமார் நூற்றி ஐம்பது வீட்டுமனைகள் உள்ளது இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர் இங்கு ஊராட்சி சார்பாக சிமெண்ட் சாலை குடிநீர் வசதி மின் விளக்குகள் செய்து கொடுத்துள்ளனர் சாதாரண மழை பெய்தாலும் இப்பகுதியில் வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கும் இது குறித்து அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஊராட்சி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு தங்களுக்கு மழைநீரால் ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை சோழவந்தான் மற்றும் கட்டக்குளம் கண்மாய்கள் நிரம்பி கழிவுநீர் வாய்க்கால் வழியாக திருவாலவாய் நல்லூர் கண்மாய்க்கு செல்கிறது ராயபுரம் கிராமத்திலுள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு இருப்பதாலும் குடியிருப்புப் பகுதி வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் அதிகமான மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் நேற்றைய முன்தினம் முதல் கவிதா மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் இப்பகுதி பொது மக்களுடைய அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அன்னமயில் 52 கூறுகையில் இப்பகுதி விரிவாக்க பகுதி இங்குள்ள மக்களுக்கு ஊராட்சி சார்பாக அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது மழை காலங்களில் இங்கு உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுகிறது இதனால் இங்கு குடியிருப்பவர்கள் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது நாங்கள் பலமுறை இங்கு தண்ணீர் வருவதை தடுப்பதற்கு வாய்க்காலில் தடுப்புச்சுவரை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் உள்ளோம் இதை அரசு செய்திருந்தால் தற்போது கொரோணா தொற்று நோய் பரவல் காரணமாக சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்து தற்போது ஒரு சில நாட்கள் வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளோம் இங்கு குழந்தைகளை பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் அரசு இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்

இதேபோல் வார்டு உறுப்பினர் முனீஸ்வரி 26 கூறும்பொழுது எங்கள் குடியிருப்பு பகுதியில் சாதாரண மழை பெய்தால் கூட தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை இது போன்ற நிலை இருக்கக் கூடிய தருவாயில் மழைத்தண்ணீர் வாய்க்கால் வழியே செல்லமுடியாமல் எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுவதால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் இங்கு அங்கன்வாடி சமுதாயக்கூடம் ஊராட்சி மண்புழு தயாரிக்கக்கூடிய கட்டிடமும் உள்ளது இப்பகுதி சுற்றி மழைநீர் பெருமளவில் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது அரசு போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு தடுப்புச்சுவர் கட்டி மழைநீர் எங்கள் பகுதிக்கு வராதவாறு தடுக்க வேண்டும் என்று கேட்டுக்க கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: