மண்சாலையால் மக்கள் அவதி..

*தொடர் மழையால் மண் சாலை வயல்வெளிபோல் காட்சியளிக்கும் பரவை பி காலனி – பாம்பு பூச்சி அச்சத்தில் குடியிருப்புவாசிகள் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? – தரமான தார்சாலை அமைக்க கோரிக்கை*

மதுரை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.

மேலும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாததால் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரவை அருகே விரிவாக்க பகுதியான ஏ.ஐ.பி.இ.ஏ. பி காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

ஆனால் இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி செய்து தரப்படவில்லை.

இதனால் அவசரகாலத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லை. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்துவரும் தொடர் மழையினால் இப்பகுதியில் தெருக்களில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி இருப்பதால் குடியிருப்புவாசிகள் சாலையில் நடந்து செல்ல முடியாமலும் வாகனத்தில் சிரமப்பட்டு செல்வதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாம்பு பூச்சி போன்ற விஷ உயிரினங்கள் வருவதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இப்பகுதி மக்கள் சார்பாக குடியிருப்போர் சங்கத்தின் சார்பாகவும் பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மதுரை மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு சாலைவசதி அமைத்து மழை காலங்களில் மழைநீர் தேங்காதபடி வடிகால் அமைத்து குடியிருப்பு மக்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*இப்பகுதி கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ தொகுதியின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடதக்கது*

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: