கனமழை வாகன ஓட்டிகள் அவதி

இராஜபாளையம் பகுதியில் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி. பணியிலிருந்த போக்குவரத்து காவலர்கள் சாலை சீரமைப்பு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகள் மற்றும் முக்கிய சாலைகள் தோண்டப்பட்ட குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் சாலைகள் பள்ளம் மேடாக சீரற்ற நிலையில் காணப்படுகிறது.

தற்போது தொடர்ந்து முன்று நாள்களாக பெய்த மழையின் காரணமாக மலையடிபட்டி பகுதி செல்லும் முக்கிய சாலையில் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கியுள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்காண வாகனங்கள் கடந்து செல்லும். மழை நீர் தேங்கியதால் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனை பணியிலிருந்த போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், தலைமை காவலர் ஜெயராஜ் மற்றும் முத்துராஜ், ஆறுமுகம், தமிழ் குமார் என்ற காவலர்கள் மலையடிப்பட்டி ரயில்வேகேட் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மண்கொண்டு நிரப்பி போக்குவரத்தை சரி செய்து வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் செல்ல வழி வகுத்தனர். போக்குவரத்து காவலர்களின் இத்தகைய செயலை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: