Connect with us

LatestNews

அரசியல் என்பது சினிமா சூட்டிங்கல்ல அமைச ்சர்..

Published

on

கமலஹாசன் சினிமா நடிகர் அவர் அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவர் அரசியலை ஏதோ சினிமா சூட்டிங் போல நினைக்கிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரை காளவாசல் துரைசாமி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை கூட்டுவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். உடன் மதுரை மாகராட்சி ஆணையாளர் விசாகன், நகரப்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அதிகாரிகளுடன் தேங்கியிருந்த நீரில் இறங்கி தண்ணீர் அகற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,

மதுரையில் 300 இடங்களில் தண்ணீர் தேக்கம் அடைந்துள்ளது மதுரையில் உயர்மட்ட பாலங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் அதிகளவில் போடப்பட்ட காரணத்தால் குடியிருப்புகள் தாழ்வான பகுதிக்கு சென்றுவிட்டனர் இதன் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது அதனை நீக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்பெல்லாம் மழை சாதாரணமாக பெய்தது தற்போது பெய்யும் மழை அதிக அடர்த்தியுடன் பெய்வதால் கொட்டோ கொட்டென்று மழை பெய்து வருகிறது.

கால் பகுதிகளில் அதிக அளவு மழைநீர் தேங்குவதால் அந்தப் பகுதிகளில் கிணறுகள் அமைத்து தண்ணீரை சேகரித்து தம் மூலமாக நீரை வெளியேற்ற 30 லட்ச ரூபாய் செலவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் வந்த பிறகு தான் அதிகளவு நிதி கொடுக்கப்படுகிறது. அரசு ஊழியர் மற்றும் ஆபத்து பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக அரசு நிதி வழங்க அரசாணை வகுத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படுகிறது. நாம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது.

தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கருத்து சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் நாமும் இருக்கிறோம் என்பதற்காக ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பேசுகிறார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

கமலஹாசன் சினிமா நடிகர் அவர் அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவர் அரசியலை ஏதோ சினிமா சூட்டிங் போல நினைக்கிறார்.

தற்போது தமிழகத்தில் பருவநிலை மாறி இருக்கிறது. மழை பெய்தால் தொடர்ச்சியாக அதிகமான மழை பெய்கிறது. வெயில் அடித்தால் தொடர்ந்து வெயில் அடிக்கிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக கையாண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது போல் தற்போது சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடிமராமத்து பணி திட்டங்கள் மூலம் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளார்.

கமலஹாசனுக்கு எதுவும் தெரியாது. ஏதோ பேசுகிறார் யாரோ எழுதிக் கொடுத்ததை சொல்கிறார் மாலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கிறார். இப்படி பேசுவது நாகரீகம் கிடையாது.

காங்கிரஸ் பாஜக எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு,

எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துக்கூற முடியாது. எம்ஜிஆர் ஒரு தேசியத் தலைவர் உலகத் தலைவர் என பேசினார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

பார்வையற்றோர்களுக்கு அரிசி வழங்கும் விழ ா:

Published

on

பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி:

மதுரை:

மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், பார்வையற்றோருக்கு
மாதா மாதம் வழங்கப்படும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் போர்வை வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில் நடந்தது. மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, ரோட்டரி உதவி ஆளுநர் வி. கார்மேகம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மதுரை ஊரக வளர்ச்சி துறை முன்னாள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னாள் நேர்முக உதவியாளர் சுப்பு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்து, பார்வையற்றோருக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கினர். நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: