இயக்குநர் கௌதம் மீது போலீஸ் எஸ்பியிடம் புகார்…

On Tue, Nov 17, 2020, 12:17 Ravi Chandran <tmlravi> wrote:

வன்முறையை தூண்டும் விதமாகவும், வேல்யாத்திரையை இழிவுபடுத்தியதாக போலீஸில் இயக்குநர் மீது புகார்:

மதுரை

பாஜகவால் நடத்தப்படும் வேல் யாத்திரையை இழிவுபடுத்தியும், வன்முறையை தூண்டும் விதத்தில் தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதம் மீது போலீஸ் எஸ்பியிடம் பாஜக மாநில விவசாயி அணி துணைத் தலைவர் முத்துராமன் புகார் அளித்துள்ளார்.
பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன் தலைமையில் உசிலம்பட்டி பகுதியிலிருந்து 200-க்கு மேற்பட்ட பாஜகவினர், திரண்டு வந்து மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமாரிடம், இயக்குநர் கௌதம் மீது துரித நடவடிக்கை கோரி,
மனு அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: