LatestNews
கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்…!
கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவுகூறப்படும் காமராஜருக்கு இன்று பிறந்தநாள். குமாரசாமி – சிவகாமி தம்பதியின் மகனாக, 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி, மதுரை அருகே விருதுப்பட்டியில் பிறந்தவர் காமராஜர்.
6 வயதிலேயே தந்தை மறைந்துவிட, தொடங்கும் முன்பே முடிவுக்கு வந்தது காமராஜரின் பள்ளிப்படிப்பு. மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்த காமராஜருக்கு, விருதுப்பட்டியின் கடைவீதியில் அரங்கேறும் விடுதலைப் போராட்டங்கள் மாற்றத்தைக் கொடுத்தன. தனது 16 வது வயதில் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சியில் முழு நேர தொண்டராக சேர்ந்து, 1930-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார் காமராஜர்.
தீவிர விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய அவர், ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற்று, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். காமராஜர் முதல்முறையாக 1954-ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். தனது அரசியல் குருவான சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்ற பிறகே காமராஜர் தலைமைச் செயலகம் சென்றதாக தகவல்கள் உண்டு.
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்தது தான் முதலமைச்சராக காமராஜரின் முதல் நடவடிக்கை.
மலர் மாலைகள் என்றால் காமராஜருக்கு அலர்ஜி, எனவே யாரேனும் மலர் மாலை அணிவித்தால் அதனை கைகளில் வாங்கிக் கொள்வார். கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
“காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி”– என்று சொன்னார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தி எமர்ஜன்ஸி அறிவித்தபோது காமராஜர் மிகவும் வேதனைப் பட்டார். இந்திராகாந்தி நாட்டின் ஜனநாயகத்தை பழி தீர்த்துக் கொண்டதாக வருந்தினார். எமர்ஜன்ஸி காலத்தில் கைது செய்யப்படாத முக்கியத் தலைவர் காமராஜர் மட்டுமே.
“நாட்டுக்கு உழச்ச எல்லாரும் சிறையில இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன விதி விலக்கு நானும் ஜெயிலுக்கு போறேன்” என எமர்ஜன்ஸியை எதிர்த்து மேடை போட்டு பேசினார் காமராஜர். இவ்விசயத்தில் மன வேதனையில் இருந்த காமராஜர் எமர்ஜன்ஸி அறிவிக்கப்பட்ட நான்கு மாதத்தில் உடல் நலிவுற்று இறந்து போனார். காமராஜர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் தொலைநோக்குப் பார்வையுடன், அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் காமராஜரை கர்மவீரராக்கியது. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் என்றும் நினைவு கூறப்படும்.
கர்மவீரரின் ஆட்சியில் தொழில் துறையில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, ஆவடி கனரக (டாங்க்) வாகன தொழிற்சாலை என பல்வேறு பெரும் தொழில் வாய்ப்புகள் இவரது ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டது.
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உட்பட, 19 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டது. தொழில் முன்னேற்றம் தொடர்பாக இவர் வகுத்து செயல்படுத்திய திட்டத்தின் காரணமாக இவர் ஆட்சிகாலத்தில் தமிழகம் தேசிய அளவில் 2ம் இடத்தில் இருந்தது.
காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார். காமராஜர் மறைவுக்குப் பிறகு 1976’ஆம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா அறிவிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.
LatestNews
கிரைம் செய்திகள்
[26/01, 11:15 AM] Pari: மதுரையில் பைக் திருட்டு ஆசாமி
குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் உத்தரவு
மதுரை ஜன 26 தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சீனி நாயக்கர் தோப்பு வை சேர்ந்தவர் சிவ பாண்டி கிருஷ்ணன் மகன் பழனிவேல் பாண்டி 24 .இவர்தொடர்ந்து பைக்திருட்டு மற்றும்வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார்இவரது இந்ததிருட்டுசெயலை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்காஉத்தரவின்பேரில் பவனிவேல்பாண்டியைபோலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
********
[26/01, 11:16 AM] Pari: நீச்சல் பயிற்சியின்போது சரவணப்பொய்கையில் டைவ்அடித் பயிற்சியாளர் தலையில்அடிபட்டு பலி மணி
மதுரை ஜன 26 நீச்சல் பயிற்சியின் போது டைவ்அடித்தபயிற்சியாளர் தலையில் அடிபட்டு பலியானார்.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 70.இவர்திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குழந்தைகளுக்கு தினந்தோறும் நீச்சல் பயிற்சி கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது சரவணப் பொய்கையில் மேல் பகுதியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடித்தார்.அப்போது குளத்தின் படிக்கட்டில்விழுந்ததால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதாவுசெய்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********************
குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால்
மகன் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை ஜன 26 குளித்துவிட்டு வந்த மகனை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மணிவண்ணன் 32. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது .குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .இவரது பழக்கத்தை அப்பா கண்டித்ததால் மனமுடைந்த மணிவண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அப்பா பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திடீர்நகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*****************
திருப்பரங்குன்றம் கோவில் அருகே
நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி செயின் பறிப்பு
மர்ம ஆசாமிக்கு வலை
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கோயில் அருகே நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
தனக்கன்குளம் கலைஞர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் மனைவி லலிதா 42. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றிருந்தார்.அவர்அங்கு உள்ள வெயில் காத்த அம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது அவரை வழி மறித்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டார் இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்து லலிதா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*******,**********
திருப்பரங்குன்றம் கண்மாயில்
நல்லிரவில்
மணல் திருடிய ஜேசிபி எந்திரம் லாரி பறிமுதல்
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கண்மாயில் நல்லிரவில் மணல் திருடிய ஜேசிபி எந்திரம் ற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுப்ரமணியபுரம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்ஷேக்அபுபக்கர். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முனியாண்டிபுரத்தில் மாடக்குளம் கண்மாய் அருகே நள்ளிரவில் மணல் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது .அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு ஜெ.சி.பிஎந்திரத்தில் மணல்திருடிக்கொண்டிருந்த இரண்டு பேர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர் .அங்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணல் திருடர்கள் பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஜே.சி.பி.மற்றும் லாரியைபறிமுதல்செய்தபோலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
**********************
மதுரை கே புதூரில்
வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு
மதுரை ஜன 26 மதுரை கே.புதூரில்வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கே புதூர், ராம லட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் 22 .இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தனர் .அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டில் வைத்திருந்த 300 கிராம் வெள்ளி பொருட்கள் தங்கமூக்குத்தி மற்றும் கடிகாரம் ஒன்றையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில் புதூர்போலீசார் வழக்கு பதிவு செய்து
திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
******************
LatestNews
புதிய படகு

LatestNews
தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை:

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மதுரை அதிமுக மாணவரணி சார்பில் தமுக்கம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அருகில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் ராஜா மாணவரணி செயலாளர் குமார் உள்ளிட்ட திரளான மாணவர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.