பொய் வழக்கு போடுவதாக புகார்”

மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் இளைஞர்கள், கூலி வேலை செய்பவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்கு போடுவதாகவும் பொய் வழக்கு போட்டு அடித்து துன்புறுத்தி மிரட்டுகின்றனர் என்றும் எங்கள் பிள்ளைகள் அனைவருமே எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபடாதவர்கள் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தான்.
ஆனால் எஸ்.எஸ் காலனி, கீரைத்துறை, அவனியாபுரம் உள்ளிட்ட காவல் துறையினர் உங்கள் பிள்ளைகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம் உங்கள் பிள்ளைகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். எனவே, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: