கைதுப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்: திரையரங்கு உரிமையாளர் தலைமறைவு…

இடப்பிரச்னை:
துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்

பழனி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடப் பிரச்னை தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சுட்டதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.
பழனியை சேர்ந்தவர் திரையரங்கு உரிமையாளர் நடராஜன். இவர் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, பழனிச்சாமி ஆகியோரிடையே இடப்பிரச்னை இருந்து வந்ததாம்.
இன்று ஏற்பட்ட பிரச்னையால், திரையரங்கு உரிமையாளர் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால் சுட்டதில், பழனிச்சாமி, சுப்பிரமணி ஆகிய இருவரும் பலத்த காயபடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலைமறைவான திரையரங்கு உரிமையாளர் நடராஜனை போலீஸார் தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: