அரசியல் பிரமுகர் கொலை

*மேலூர் அருகே அரசியல் பிரமுகர் வெட்டி படுகொலை …*

மேலூர் :

மேலூர் அருகே பார்வர்ட் பிளாக் கட்சியின் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சி பிரமுகர் . முத்துக்குமரன். இவர், தனக்கு சொந்தமான வயலில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவில் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அரசியல் காரணங்களால் வெட்டிக் கொல்லப்பட்டாரா, அல்லது சொத்து முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகரான முத்துக்குமரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது, மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: