கடையில் தீ விபத்து தவிர்ப்பு..

மதுரையில் மீண்டும் கடையில் தீ விபத்து தவிர்ப்பு:

மீண்டும் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

… மதுரை தெற்கு வெளி வீதியில் இன்று அதிகாலை காலை துணி மொத்த விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது தீயணைப்பு 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள் மற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், மீண்டும் இன்று இரவு 8 மணி அளவில் தீ விபத்து நடந்த பகுதி அருகே அதாவது மஞ்சநகர தெரு மஹால் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள ஏகே அகமது என்னும் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான ரெடிமேட் துணி வைத்துள்ள குடோன் ஒன்று உள்ளது.. இந்த குடோனில் புகை வருவதாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு குடோனில் இருந்து கொண்டிருந்த தீயினை விரைவாக அணைத்தனர் .
இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாட்டால் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: