மதுரை துணிக்கடையில் தீ விபத்து..இரு வீர ர்கள் பலி..

On Sat, Nov 14, 2020, 16:19 Ravi Chandran <tmlravi> wrote:

மதுரை துணிக்கடையில் பயங்கர தீ; 2 தீயணைப்பு வீரர்கள் பலி

மதுரை: மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கு8ம் பணியில் ஈடுபட்ட போது கட்டடம் இடிந்து விழுந்ததில், தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியாகினர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை விளக்குத்தூண் பகுதியிலுள்ள நவபத் கானா தெருவில், துணிக்கடை ஒன்று உள்ளது. இது ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. நேற்று இரவு இந்த கடையில் தீ பற்றியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை சிட்டி மற்றும் அனுப்பானடி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு துணி பார்சல்கள் நிறைய வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென வேகமாக பரவியது.
கட்டடம் இடிந்தது

இந்நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36) இறந்தனர். மேலும் கல்யாண குமார்(30), சின்னகருப்பு(30) ஆகியோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி தீபாவளி மகிழ்ச்சியின்றி சோகமாக காணப்பட்டது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: