கூலி தொழிலாளர் தீக்குளிக்க முயற்சி

*காவல்துறையினர் துன்புறுத்துவதாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி*

போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற கூலித்தொழிலாளி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி. காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

காவல்துறையினர் தன் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவதாக தீக்குளிக்க முயற்சி செய்த கூலித்தொழிலாளி குற்றச்சாட்டு .

இவரை கலெக்டர் அலுவலக பாதுகாப்பிற்காக நின்றிருந்த தல்லாகுளம் போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் இவரை விசாரணைக்காக போலீசார் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: