ஹோட்டலில் திருட்டு..

வாடிப்பட்டியில்
ஓட்டலை உடைத்து
பொருள்கள் திருட்டு

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் மின்வாரியஅலுவலகம்
முன்பு மதுரை பெருங்குடியை சேர்ந்த பஞ்சவர்ணம்(53)என்பவர் ஹோட்டல் வைத்து
நடத்திவருகிறார். இவர்வழக்கம்போல் இரவு 11மணிக்கு கடையை அடைத்துவிட்டு
காலையில் ஹோட்டலை திறந்து பார்த்த போது அங்கிருந்த
மானிட்டர் 2. ஹார்டுடிஸ்க் 1, மினிஜெராக்ஸ்மிஷின் 1, பில்லிங்மிஷின் 1
ஆகியவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்பு
ரூ.30ஆயிரமாகும் இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீஸ்சப் இன்ஸ்பெக்டர்
ராஜேந்திரன் வழக்குபதிவுசெய்து விசாரணைசெய்து வருகிறார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: