LatestNews
ரஜினி பிறந்த நாள்..
டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளை கொண்டாட தயராகும் ரஜினி ரசிகர்கள்.
மதுரை
பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிட்டு ரஜினியை தமிழக அரசியலுக்கும் அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ள மதுரை ரசிகர்கள்.
தமிழகம் தலை நிமிர தலைமையேற்க வா தலைவா என்ற வாசகத்துடன் மதுரை நகர் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி மீண்டும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ளனர்.
மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி தலைமையிலான குழுவினர் இந்த போஸ்டர்களை மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
LatestNews
சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்…

சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்மலைமேல் உள்ள 6வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்இயது இதில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.
LatestNews
விடியோவை பார்த்து பரிசு வழங்க கோரிக்கை

பாலமேடு ஜல்லிக்கட்டில்
வீடியோவை பார்த்து பரிசு வழஙக கோரி ஆட்சியரிடம் மனு
மதுரை :
பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக பரிசு வழங்கப்பட்டதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்திய முறைகேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பொதும்பு பிரபாகரன் க்கு 17 மாடு பிடித்து முதலிடம் பிடித்தார். அதை மறுத்து மற்றொரு நபரை அறிவித்துவிட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு வீடியோ பார்த்து அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LatestNews
மதுபான கடை வேண்டாம்: பாஜக போர்க்கொடி…

டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு
மதுரை
மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடை வைக்கக்கூடாது என்று , அக்கிரம மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும்
மாவட்ட ஆட்சியாரிடம் மனுகொடுத்தனர்.