தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர் ப்பாட்டம்..

மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வலியுறுத்தி 365 வது நாள் கருப்பு சட்டை போராட்டம் :

மதுரை

தமிழகத்தில் உள்ள பள்ளர், குடும்பர், தேவேந்திரகுலத்தார், பண்னாடி, வாதிரியார், காலாடி, கடையர் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது, இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டது.

ஜான்பாண்டியன் மற்றும் கட்சியினர் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி சென்ற ஆண்டு இதே நாளில் இருந்து இதுநாள் வரை ஒரு ஆண்டாக கருப்பு சட்டை அணிந்து வருகிறார்கள், இதை நினைவுபடுத்தும் விதமாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை அடுத்து 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்க் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: